Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Saturday, September 24, 2022

எஸ்பிஐ வங்கியில் 5008 காலியிடங்கள்: டிகிரி முடித்தவர்களுக்கு அருமையான வாய்ப்பு!

பாரத் ஸ்டேட் ஆப் இந்தியாவின் எழுத்தர் பணிநிலையில் உள்ள இளநிலை அசோசியட் பதவிகளுக்கு உடனடியாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

இதற்கான கடைசி தேதி வரும் 27ம் தேதியோடு நிறைவட உள்ள நிலையில், கடைசி நிமிடம் வரை காத்திருக்காமல் அதற்கு முன்னரே, போதிய கால அவகாசத்தில் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

ஆள்சேர்க்கை:

இம்மாதம் 7ம் தேதி 5008 இளநிலை அசோசியேட் பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை எஸ்பிஐ அறிவித்தது. 01.08.2022 அன்று 28 வயதுக்கு கீழ் உள்ள பட்டதாரிகள் அனைவரும் இதற்கு விண்ணப்பிக்கலாம். இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வழக்கமான தளர்வு அளிக்கப்படும். எனவே, நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பிற்கு மேல் பட்டியல் கண்ட சாதிகள்/ பட்டியல் கண்ட பழங்குடி வகுப்பினர் 5 ஆண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள். இதற்பிறப்படுத்தப்பட்ட வகுப்பினர் மூன்றாண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள். நிர்ணயிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள் 10 ஆண்டு வரை சலுகை பெற தகுதியுடைவராவர்.

குஜராத், மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம், தமிழ்நாடு, மஹாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் உள்ள எஸ்பிஐ அலுவலகங்களில் இந்த பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. விண்ணப்பதாரர்கள் ஏதேனும் ஒரு மாநிலத்தில் உள்ள பணிகளுக்கு மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் உள்ள காலியிடங்களின் எண்ணிக்கை 355 ஆகும். இதில், 153 இடங்கள் பொதுப் பிரிவினருக்கும், 96 இடங்கள் ஓபிசி பிரிவினருக்கும், 35 இடங்கள் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவைச் சேர்ந்தவருக்கும், 67 இடங்கள் பட்டியல் இனத்தைச் சேர்ந்தவருக்கும், 4 இடங்கள் பட்டியல் பழங்குடியியினருக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன.

விண்ணப்பக் கட்டணம்: இதற்கான, விண்ணப்பக் கட்டணம் ரூ.750ஆகும். பட்டியல் சாதிகள், பழங்குடியினர், முன்னாள் ராணுவத்தினர், நிர்ணயிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள் விண்ணப்பிக்க கட்டணமம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பம் செய்வது எப்படி? 27.09.2022 ஆம் தேதிக்குள் sbi.co.inஎன்ற இணையதளம் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். தேர்விற்கு விண்ணப்பிக்கும் முறை மற்றும் தேர்வு நடைபெறும் முறை அனைத்தும் இணையதளம் வழியாக நடைபெறும்.

தெரிவு செய்யப்படும் முறை: இப்பதவிக்கான தேர்வு முறையானது, முதல் நிலைத்தேர்வு (Prelims), முதன்மைத் தேர்வு(Mains) என 2 முறைகளில் நடைபெற உள்ளது. முதல் நிலைத் தேர்வானது நவம்பர் மாதத்திலும், முதன்மைத் தேர்வானது டிசம்பர்/பிப்ரவரி 2023 அன்றும் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment