JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி
மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் தேசிய வேலைவாய்ப்பு சேவை இணையதளத்தில் 4,82,264 காலி இடங்கள் தற்போது உள்ளன. இது, இதுவரை இல்லாத அதிக எண்ணிக்கையாகும்.
வேலை தேடுவோர்களையும் மற்றும் வேலை வழங்குபவர்களையும் ஒருங்கிணைக்கும் வகையில் தேசிய வேலைவாய்ப்பு சேவை இணையதளம் கடந்த 2014ம் ஆண்டு துவங்கப்பட்டது. செப்டம்பர் 26, 2022ன் படி, இந்த இணையத்தளத்தில் வேலை அளிக்க கூடியவர்கள் எண்ணிக்கை மட்டும் 2,01,633 ஆக உள்ளன. இவர்கள், தங்கள் நிறுவனத்தில் காலியாக உள்ள கிட்டத்தட்ட 4,82,264 காலிப்பணியிடங்கள் குறித்த விவரங்களை பதிவு செய்திருக்கின்றனர். கடந்த 2019ம் ஆண்டு ஜூன் மாதம் அதிகளவாக 3,20,917 என்ற எண்ணிக்கை இருந்தது.
நிதி மற்றும் ஆயுள் காப்பீடு சேவை, ஆப்ரேஷன்/சப்போர்ட், விடுதி/உணவு மற்றும் கேட்டரிங், சுகாதார சேவை, தகவல் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் அதிகளவிலான வேலைவாய்ப்புகள் பதிவு செய்யப்பட்டுளன. எனவே, வேலைதேடும் இளைஞர்கள் இந்த இணையதளத்தில் பதிவு செய்து, பயன்படுத்தி தங்கள் திறமைகளை அடையாளம் கண்டு கொண்டு வேலை அளிப்போரை தேர்வு செய்து கொள்ளலாம்.

தேசிய வேலைவாய்ப்பு இணையதளம்
தேசிய வேலைவாய்ப்பு சேவை இணையதளம் தொடங்கப்பட்டதிலிருந்து 1.09 கோடிக்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் பற்றிய தகவல்கள் இடம்பெற்றுள்ளதாகவும், நடப்பாண்டு ஏப்ரல் முதல் செப்டம்பர் 26 வரை, தெரிவு செய்யப்பட்ட வேலை தேடுவோரின் எண்ணிக்கை 25 லட்சத்தை கடந்துள்ளதாகவும் தொழிலாளர் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பதிவு செய்வது எப்படி?
National Career Service என்ற இணைய பக்கத்திற்கு செல்லவும்.
முகப்பு பக்கத்தில் Job seeker என்ற இணைப்பிற்குச் சென்று பதிவு செய்ய வேண்டும்.
இ-ஷ்ரம் பதிவு எண், UAN EPFO எண், பான் நம்பர் ஆகியவற்றின் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
இந்த இணைய தளத்தில் வேலைவாய்ப்புப் பற்றிய தகவல்களைத் தாண்டி, வேலைவாய்ப்பு கலந்தாய்வு, தொழில் வழிகாட்டுதல் மற்றும் வேலைவாய்ப்பு திறன் பயிற்சி ஆகியவற்றின் மூலம் வேலை தேடுவோரின் தனித்தன்மையை மேம்படுத்துவதற்கான வசதிகளும் இடம்பெற்றுள்ளன.
No comments:
Post a Comment