Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Friday, September 30, 2022

டீ , காபி பதில் இனிமே இதை குடித்து பாருங்க! மலச்சிக்கல் மூட்டு வலி இருக்காது!


நீங்கள் தினமும் குடித்து வரும் டீ காபிக்கு பதிலாக இந்த பானத்தை நீங்கள் குடித்து வரும் பொழுது உங்களுக்கு ஏற்படும் மலச்சிக்கல், மூட்டு வலி, கை கால் முழங்கால் வலி எதுவுமே இருக்காது அந்த பொடியை எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம்.

1. வேர்க்கடலை ஒரு கப்
2. கம்பு ஒரு கப்
3. கோதுமை ஒரு கப்
4. பொட்டுக்கடலை ஒரு கப்
5. ஜவ்வரிசி ஒரு கப்
6. ஏலக்காய் 5
7. சுக்கு 10 கிராம்

1. முதலில் அடுப்பில் ஒரு சட்டியில் போட்டு வேர்க்கடலையை நன்கு வறுத்துக் கொள்ளவும். இதை தனியாக எடுத்துக் கொள்ளவும்.

2. பின் அதே சட்டியில் கம்பு ஒரு கப்பை போட்டு நன்கு வறுத்துக் கொள்ளவும். தனியே எடுத்து வைத்துக் கொள்ளவும்

3. பின் கோதுமை ஒரு கப்பை போட்டு வறுத்துக் கொள்ளவும். பின் தனியே எடுத்து வைத்துக் கொள்ளவும்.

4. பின் பொட்டு கடலையை வறுத்து எடுத்து கொள்ளவும்.

5. ஜவ்வரிசி வறுத்து எடுத்து கொள்ளவும். அதனுடன் ஏலக்காய் 5 சேர்த்து வறுத்து கொள்ளவும்.

6. வறுத்து எடுத்த அனைத்து பொருளையும் தனி தனியாக அரைத்து பொடி செய்து சலித்து எடுத்து கொள்ளவும்.

7. பின் சுக்கு 10 கிராமை எடுத்து இடித்து நன்கு சலித்து மாவுடன் சேர்த்து கொள்ளவும்.

8. அனைத்து மாவையும் நன்கு கலந்து ஒரு கண்டெய்னரில் எடுத்து வைத்து கொள்ளவும்.

9. இப்பொழுது காலையில் ஒரு ஸ்பூன் அளவு எடுத்து ஒரு டம்ளரில் போட்டு 2 ஸ்பூன் நாட்டு சர்க்கரை கலந்து சூடான பாலை ஊற்றி கலந்து காபி டீக்கு பதிலாக இதை நீங்கள் குடித்து வரும் பொழுது உடல் சோர்வு நீங்கி இரத்தம் பற்றாக்குறை இன்றி உங்களது அனைத்து பிரச்சனையும் சரியாகும்.

No comments:

Post a Comment