Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Sunday, September 4, 2022

தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற தேவையில்லை இடைநிலை ஆசிரியருக்கு ஊதிய உயர்வை வழங்க வேண்டும் மதுரை ஐகோர்ட்டு உத்தரவு!


தூத்துக்குடி மாவட்டம் குருவிகுளத்தை சேர்ந்த அந்தோ ணிசாமி , மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் , சிதம்பராபுரம் ஆர்.சி. பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணியாற்றுகிறேன் . பல ஆண்டு ஊதிய உயர்வு உள்ளிட்ட எந்த பலன்களும் வழங்கப்படவில்லை . இவற்றை வழங் கும்படி மாவட்ட கல்வி நிர்வாகத்திற்கு மனு அனுப்பி னேன் . எனது கோரிக்கையை சங்கரன்கோவில் மாவட்ட கல்வி அலுவலர் நிராகரித்தார் .

ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறவில்லை என்ற காரணத்தை காட்டி , உரிய பலன்களை மறுத்துள்ளனர் . இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய உயர்வுக்கு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற அவசியம் இல்லை என சுப்ரீம் கோர்ட்டு ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது .

அதன் படி கல்வி அதிகாரிகளின் உத்தரவை ரத்து செய்து , எனக் கான ஆண்டு ஊதிய உயர்வு உள்ளிட்ட பலன்களை வழங்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியிருந்தார் . இந்த மனுவை நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் விசாரித்தார் .

முடிவில் , மனுதாரருக்கு ஊதிய உயர்வு உள்ளிட்ட பலன்களை வழங்க மறுத்த மாவட்ட கல்வி அதிகாரியின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது .

மனுதாரருக்கு கடந்த 2012 - ம் ஆண்டில் இருந்து உரிய பலன்களை வழங்குவது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் 8 வாரத்தில் உரிய உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தர விட்டார் .

No comments:

Post a Comment