Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Tuesday, September 27, 2022

அம்மான் பச்சரிசி இலை ஒரு அற்புதமான மூலிகை


அம்மன் பச்சரிசி இலை பலநாடுகளில் பல நோய்களை தீர்க்க பயன்படுகிறது. குறிப்பாக தோல் பிரச்சனைகள், ஆஸ்துமா, டெங்கு காய்ச்சல், மலேரியா போன்ற நோய்களுக்கு

அம்மான் பச்சரிசி இலைகளை எடுத்து சிறிது பூண்டு, சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கி துவையலாக செய்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் நீங்கும்.

மோருடன் கலந்து குடித்தால் உடல் சூட்டைத் தணிக்கும், குடல் புண்ணை சரி செய்யும்.
உடலில் கொப்பளங்கள் வீக்கம் இருந்தால் அம்மான் பச்சரிசி இலையை அரைத்து அதன் மீது பற்று போட்டால் கொப்பளங்கள் வீக்கங்கள் குணமாகும்

அம்மான் பச்சரிசி பாலை மருவின் மீது தடவி வந்தால் மரு உதிர்ந்துவிடும்.

அம்மான் பச்சரிசி, தூதுவளை இரண்டையும் சம அளவு எடுத்து பாசிப்பருப்பு உளுந்தம் பருப்பு இவற்றுடன் சேர்த்து கூட்டு வைத்து அதனுடன் தேங்காய் துருவல், நெய் கலந்து சாப்பிட்டு வந்தால் தாது பலப்படும்.

இதன் குடும்பமே பால் பெருக்கி என்று அழைக்கப்படும். 

தாய்மார்கள் இதன் பூக்களை பசும்பாலில் குடித்துவர தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கும்

நகச்சுத்தி கால் ஆணி போன்ற பிரச்சனைகளுக்கும் சிறந்த தீர்வு தரும்

ஏதாவது நோய் வந்தால் தான் அம்மான் பச்சரிசி இலையை சாப்பிட வேண்டும் என்று இல்லை.. சிறிதளவு உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

No comments:

Post a Comment