JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி
தமிழக அரசு துறைகளில் காலியாக உள்ள மூன்றரை லட்சம் பணியிடங்களை உடனே நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து, பாமக தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழக அரசு துறைகளில் மூன்றரை லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் காலி பணியிடங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறதே தவிர குறையவில்லை.
காலியிடங்களை நிரப்பாமல் வைத்து விட்டு, ஐந்தாண்டுகளுக்கும் மேலாக நீடிக்கும் காலியிடங்களை ரத்து செய்ய முயற்சிப்பது ஆட்குறைப்பு நடவடிக்கை தான். இதன் முடிவில் பத்தாண்டுகளுக்கும் மேலாக பணியாற்றும் தற்காலிக பணியாளர்கள் வேலை இழக்க நேரிடும். அதுமட்டுமின்றி, தமிழகத்தில் வேலையில்லாத திண்டாட்டம் அதிகரிக்கும். எனவே, தமிழக அரசுத் துறைகளில் காலியாக உள்ள மூன்றரை லட்சம் பணியிடங்களை உடனடியாக நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.
No comments:
Post a Comment