Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Sunday, September 11, 2022

மொபைல் போன் மூலம் வாக்காளர் அட்டை - ஆதார் எண் இணைப்பது எப்படி? Step-by-Step வழிகாட்டி!

வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியை இந்திய தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், எளிதான வழியில் மொபைல் போன் மூலம் அதை மேற்கொள்ளும் வழிமுறைகள் குறித்து பாப்போம்.

நாடு முழுவதும் வாக்காளர் பட்டியலில் உள்ள குழப்பங்கள், குறைகளை சரி செய்யும் நோக்கில், வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியை இந்திய தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது. நீதிமன்ற உத்தரவு இருப்பதால், ஆதார் எண்ணை கட்டாயம் தர வேண்டும் என்று அறிவுறுத்தாவிட்டாலும், வாக்காளர் பட்டியலில் வெளிப்படைத் தன்மையை பேணும் வகையில், ஆதார் அல்லது குடும்ப அட்டை, வங்கி கணக்கு எண் உள்ளிட்ட 11 ஆவணங்களையும் இணைக்கலாம் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் ஆதார் இணைப்புக்கான பணிகள் கடந்த ஆகஸ்ட் 1-ம் தேதி தொடங்கியது. குறிப்பாக, இதற்கென ‘6B’ என்ற படிவத்தையும் தேர்தல் ஆணையம் அறிமுகம் செய்துள்ளது. தேசிய வாக்காளர் சேவை அமைப்பான ‘NVSP போர்ட்டல்’, வாக்காளர் சேவை எண் மூலமாக இந்த இணைப்பை மேற்கொள்ளலாம். அல்லது, வீடு வீடாக வரும் வாக்காளர் பதிவு அலுவலரிடம் ‘6பி’ படிவத்தை பெற்று பூர்த்தி செய்து வழங்கலாம் என தெரிவிக்கப்பட்டு, பணிகள் நடந்து வருகின்றன. இப்பணிகளை 2023 மார்ச் 31-ம் தேதிக்குள் முடிக்க இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

மேற்கூறிய வழிகளில் மட்டுமல்லாது ‘Voter Helpline App’ என்ற செயலி (அப்ளிகேஷன்) மூலமாகவும் செல்போன் துணை கொண்டு இந்த இணைப்பு பணியை சுலபமாக மேற்கொள்ளலாம் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இந்த செயலி மூலம் இணைப்பது எப்படி?

▪️கூகுள் பிளே ஸ்டோர் அல்லது ஆப்பிள் ஆப் ஸ்டோரில் இருந்து Voter Helpline செயலியை டவுன்லோட் செய்ய வேண்டும்.

▪ அந்த செயலியை ஓபன் செய்ததும் ‘I Agree’ ஆப்ஷனை கிளிக் செய்து நெக்ஸ்ட் கொடுக்க வேண்டும்

▪ அதில் ‘Voter Registration’ என உள்ள முதல் ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும்.

▪ அதில் அங்கீகார படிவம் 6B-யை ஓபன் செய்ய வேண்டும்.
தொடர்ந்து ‘லெட்ஸ் ஸ்டார்ட்’ ஆப்ஷனை கிளிக் கொடுக்க வேண்டியுள்ளது.

▪ அதில் உங்கள் ஆதார் எண்ணுடன் பதிவு செய்யப்பட்டுள்ள மொபைல் எண்ணை உள்ளிட்டு, OTP அனுப்புவதற்கான ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும்.

▪ மொபைல் எண்ணுக்கு வரும் OTP -யை அதில் உள்ளிட்டு, Verify செய்ய வேண்டும்.

▪ அதில் வாக்காளர் அடையாள அட்டை உள்ளது என்ற ஆப்ஷனை தேர்வு செய்து, அதன் எண்ணை (EPIC) உள்ளிட வேண்டும்.

▪ தொடர்ந்து வாக்காளர்கள் தங்களது மாநிலத்தை தேர்வு செய்து, வாக்காளர் விவரத்தை எடுக்க வேண்டி உளள்து.

▪ அந்த விவரங்கள் வந்ததும் ‘Proceed’ ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும்.

▪ பின்னர் ஆதார் எண், பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் போன்ற விவரங்களை உள்ளிட வேண்டும்.

▪ அதை செய்ததும் ‘Done’ கொடுத்தால் படிவம் 6B ஓபனாகிறது. கொடுக்கப்பட்டுள்ள விவரங்களை மீண்டும் ஒரு முறை சரி பார்த்துக் கொண்டு ‘Confirm’ கொடுத்தால் அந்த படிவம் சமர்ப்பிக்கப்படும்.

முக்கியமாக இதனை செய்ய வாக்காளர்கள் தங்கள் ஆதார் எண்ணுடன் தங்கள் மொபைல் எண்ணை பதிவு செய்திருப்பது அவசியம்.

No comments:

Post a Comment