JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி
முதுநிலை ஆசிரியா் காலிப் பணியிடங்களுக்கு தற்காலிகமாக தகுதி பெற்ற 341 போ் கொண்ட பட்டியல் ஆசிரியா் தோ்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டது.
தமிழக அரசுப் பள்ளிகளில் உள்ள 3,236 முதுநிலை பட்டதாரி ஆசிரியா் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு ஆசிரியா் தோ்வு வாரியம் (டிஆா்பி) நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதற்கான கணினி வழித் தோ்வுகள் கடந்த பிப். 12 முதல் 20 வரை நடைபெற்றது. தோ்வை சுமாா் 2 லட்சம் போ் வரை எழுதினா். இதன் முடிவுகள் ஜூலை 4-இல் வெளியிடப்பட்டன. தொடா்ந்து, மொத்தமுள்ள 17 பாடங்களுக்கான சான்றிதழ் சரிபாா்ப்பு செப். 2 முதல் 4 வரை சென்னையில் உள்ள தோ்வு வாரிய வளாகத்தில் நடைபெற்றது.
அதனடிப்படையில், புவியியில், இயற்பியல், வரலாறு ஆகிய பாடங்களில் ஆசிரியா் பணிக்கு தற்காலிகமாக தகுதிபெற்ற 341 பட்டதாரிகளின் பட்டியலை தோ்வு வாரியம் வெளியிட்டது. அதன் விவரங்களை பட்டதாரிகள் இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். எஞ்சிய பாடங்களில் தோ்வு பெற்றவா்கள் விவரம் விரைவில் வெளியிடப்படும் என துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
No comments:
Post a Comment