JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி
நாம் உணவில் பயன்படுத்தும் பூண்டு மிகவும் ஆரோக்கியமான உணவுப் பொருள் என்பது அனைவருக்கும் தெரியும்.
அந்த பூண்டுகளை அன்றாட உணவில் சேர்ப்பதுடன், அதனை பச்சையாக சாப்பிட்டால், உயர் இரத்த அழுத்தம், குறைந்த இரத்த அழுத்தம், உயர் கொலஸ்ட்ரால், இதய நோய்கள், மாரடைப்பு, பெருந்தமனி தடிப்பு உள்ளிட்ட பிரச்சனைகளை கட்டுப்படுத்தலாம்.
மேலும் பூண்டுகள் ஆன்ஜியோடென்சின் II என்னும் ஹார்மோன் உற்பத்தியை தடுக்கும் மற்றும் இரத்த நாளங்களை ரிலாக்ஸ் அடையச் செய்யவும் உதவுகிறது. பூண்டு உடலில் இருக்கும் கெட்ட கொழுப்புக்கள் கட்டுப்படுத்தவும் உதவுகிறது.
இத்தகைய சிறப்புடைய பூண்டை வறுத்து சாப்பிட்டால், 24 மணிநேரத்தில் நம் உடலினுள் பல்வேறு அற்புதங்கள் ஏற்படும். இங்கு அந்த அற்புதங்கள் குறித்து தான் பார்க்க போகிறோம்.
வறுத்த 6 பூண்டுகளை சாப்பிட்ட ஒரு மணிநேரத்தில், இரைப்பையில் செரிமானமாகி, உடலுக்கு சிறந்த உணவாக மாறும்.
2-4 மணிநேரத்தில் பூண்டு உடலில் உள்ள ப்ரீ-ராடிக்கல்களை எதிர்த்துப் போராடும் மற்றும் உடலினுள் இருக்கும் புற்றுநோய் செல்களை அழிக்கும்.
4-6 மணிநேரத்தில் உடலின் மெட்டபாலிசம் தூண்டப்பட்டு, உடலினுள் இருக்கும் அதிகப்படியான நீர்மம் வெளியேற்றப்படும் மற்றும் தேங்கியிருக்கும் கொழுப்புக்கள் கரைய ஆரம்பிக்கும்.
6-7 மணிநேரம்
பூண்டில் உள்ள ஆன்டி-பாக்டீரியல், இரத்த நாளங்களில் நுழைந்தப் பின், இரத்தத்தில் உள்ள பாக்டீரியாக்களை எதிர்த்துப் போராட ஆரம்பிக்கும்..
7-10 மணிநேரம்
இக்காலத்தில், பூண்டில் உள்ள சத்துக்கள் உடலால் உறிஞ்சப்படுவதோடு, பூண்டு உடலுக்கு நல்ல பாதுகாப்பு வளையத்தை ஏற்படுத்தும்.
10-24 மணிநேரம்
முதல் 1 மணிநேரத்தில் ழுண்டு செரிமானமாகியப் பின், பூண்டு உடலை ஆழமாக சுத்தம் செய்யும் பணியை ஆரம்பித்துவிடுவதுடன், கீழே கொடுக்கப்பட்டுள்ள செயல்களையும் செய்ய ஆரம்பிக்கும்.
கொலஸ்ட்ரால் அளவுகள் சீராக்கப்படும்.
தமனிகள் சுத்தம் செய்யப்படும் மற்றும் இதய நோய்களில் இருந்து பாதுகாப்பு கிடைக்கும்.
இரத்த அழுத்தத்தை சீராக்கும்.
உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்தும்.
உடலினுள் கனமான மெட்டல்கள் நுழைவதைத் தடுக்கும்.
எலும்புகளின் வலிமை அதிகரிக்கும்.
அதிகப்படியான மருத்துவ குணத்தால், பூண்டு உடலில் உள்ள சோர்வைப் போக்கும்.
உடலில் உள்ள செல்களின் வாழ்நாளை நீட்டிக்கும்.
No comments:
Post a Comment