JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி
நிர்வாகம் மற்றும் தொழில்முறை வேலைகள் தொடர்பான ஆள் சேர்க்கை அறிவிப்பை இந்தியாவின் பொதுத் துறை நிறுவனமான பாங்க் ஆஃப் பரோடா வெளியிட்டுட்டள்ளது.ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் இதற்கு விண்ணப்பித்து பலனடையலாம்.
காலியிடங்கள்: 346
பணியிடங்கள் விவரம்:
1. Sr. Relationship Manager : 320 காலியிடங்கள்
கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்தில் இருந்து ஏதேனும் ஒரு பாடத்தில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலாண்மை பாட நெறியில் இரண்டு ஆண்டுகள் முழுநேர முதுநிலை பட்டபபடிப்பு/டிப்ளமோ படிப்பில் தேர்ச்சிப் பெற்றிருந்தால் கூடுதல் நன்மை.
இதனுடன், இந்தியாவில் செயலோடும் அரசு/தனியார்/ சர்வதேச வங்கிகளில் தொடர்பு மெளலாளராக 2 வருட அனுபவம் இருத்தல் வேண்டும்.
01.10.2022 அன்று விண்ணப்பதாரர்கள் வயது 24க்குமேலும் , 40 க்கு கீழும் இருத்தல் வேண்டும்
2. e- Wealth Relationship Manager - 24 காலியிடங்கள்
கல்விக்கான தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்தில் இருந்து ஏதேனும் ஒரு பாடநெறியில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலாண்மை பாடத்தில் இரண்டு ஆண்டுகள் முழுநேர முதுநிலை பட்டப்படிப்பு/டிப்ளமோ படிப்பில் தேர்ச்சிப் பெற்றிருந்தால் கூடுதல் நன்மை.
இதனுடன், வள மேலாண்மை துறையில் இந்தியாவில் உள்ள அரசு/தனியார்/ சர்வதேச வங்கிகளில் தொடர்பு மெளலாளராக 1.5 வருட அனுபவம் இருத்தல் வேண்டும்.
01.10.2022 அன்று விண்ணப்பதாரர்கள் வயது 23க்குமேலும் , 35க்கு கீழும் இருத்தல் வேண்டும்.
3. Group Sales Head (Virtual RM Sales Head) - ஒரு காலியிடம்
கல்விக்கான தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்தில் இருந்து ஏதேனும் ஒரு பாடநெறியில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலாண்மை பாட நெறியில் இரண்டு ஆண்டுகள் முழுநேர முதுநிலை பட்டபபடிப்பு/டிப்ளமோ படிப்பில் தேர்ச்சிப் பெற்றிருந்தால் கூடுதல் நன்மை.
இதனுடன், நிதி சேவையில் குறைந்தது 10 ஆண்டுகள் இருத்தல் வேண்டும்.
01.10.2022 அன்று விண்ணப்பதாரர்கள் வயது 31க்குமேலும் , 45 க்கு கீழும் இருத்தல் வேண்டும்.
4. Operations Head-Wealth : ஒரு காலியிடம்
கல்விக்கான தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்தில் இருந்து ஏதேனும் ஒரு பாடநெறியில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். எம்பிஏ அல்லது அதற்கு இணையான படிப்புகளுக்கு அதிக முன்னுரிமை கொடுக்கப்படும்.
இதனுடன், நிதி சேவையில் குறைந்தது 10 ஆண்டுகள் இருத்தல் வேண்டும்.
01.10.2022 அன்று விண்ணப்பதாரர்கள் வயது 35க்கு மேலும் , 50க்கு கீழும் இருத்தல் வேண்டும்.

பின்குறிப்பு: இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வழக்கமான தளர்வு அளிக்கப்படும். நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பிற்கு மேல் பட்டியல் கண்ட சாதிகள்/ பட்டியல் கண்ட பழங்குடி வகுப்பினர் 5 ஆண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள். இதர பிறப்படுத்தப்பட்ட வகுப்பினர் மூன்றாண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள். நிர்ணயிக்கப்பட்ட மாற்றத் திறனாளிகள் 10 ஆண்டுகள் வரை சலுகை பெறலாம்.
தெரிவு முறை: தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணுலுக்கு அழைக்கப்படுவார்கள். இது முழுக்க , ஒப்பந்த அடிப்படையிலான பணியாகும். ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு செயல்திறன் அடிப்படையில் பணி காலம் நீட்டிக்கப்படும்.
No comments:
Post a Comment