சேலம் மாவட்ட அரசு பள்ளியில் படித்த மாணவர்களில் 71 பேருக்கு மருத்துவ 'சீட்'

சேலம் : சேலம் மாவட்டத்தில், அரசு பள்ளி மாணவர்களில், 65 பேருக்கு எம்.பி.பி.எஸ்., 6 பேருக்கு பி.டி.எஸ்., சீட்கள் கிடைத்துள்ளன.தமிழகத்தில் மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையில், 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது.

இதில் மருத்துவ படிப்பில் சேர, சேலம் மாவட்டத்திலிருந்து, 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் விண்ணப்பித்திருந்தனர். 

நேற்று முன்தினம் சென்னையில் நடந்த கவுன்சிலிங்கில், சேலம் மாவட்டத்திலிருந்து பங்கேற்ற, 65 மாணவ, மாணவியருக்கு எம்.பி.பி.எஸ்., படிப்புகளுக்கும், 6 மாணவர்களுக்கு பி.டி.எஸ்.,ல் சேரவும் சீட் கிடைத்துள்ளது. 

கடந்த மூன்றாண்டுகளாக தொடர்ந்து, 70க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர், சேலம் மாவட்டத்திலிருந்து அரசு பள்ளி ஒதுக்கீட்டில் சேர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.
Share:

No comments:

Post a Comment

Total Pageviews

Categories

Thamizhkadal WhatsApp Channel