Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Thursday, October 6, 2022

தமிழ்நாட்டு ரேசன் கடைகளில் இன்று முதல் விற்பனை... இரண்டு கிலோ முன்னா 958 ... ஐந்து கிலோ சோட்டு 1518..!


தமிழ்நாட்டு ரேசன் கடைகளில் இன்று முதல் விற்பனை... இரண்டு கிலோ முன்னா 958! ஐந்து கிலோ சோட்டு 1518...!

முன்னா 2 கிலோ..! சோட்டு 5 கிலோ...!!

சிறிய அளவு பயன்பாட்டுக்காக தமிழகத்தில் உள்ள ரேசன் கடைகளில் இன்று முதல் கேஸ் சிலிண்டர் விற்பனை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. முன்னா என்ற பெயரில் 2 கிலோ எடை கொண்ட சிலிண்டரும், சோட்டு என்ற பெயரில் 5 கிலோ எடை கொண்ட சிலிண்டரும் வழங்கும் திட்டம் ரேசன் கடைகளில் இன்று தொடங்கப்பட்டுள்ளது.

ஆதார் மற்றும் குடும்ப அட்டை தேவையில்லை

ஆதார் அட்டை மற்றும் குடும்ப அட்டை இருந்தால் மட்டுமே சிலிண்டர் பெற முடியும் என்ற நிலை இருந்தது. ஆனால், இத்திட்டத்தின் கீழ் ஏதேனும் அடையாள அட்டையை காண்பித்து பணம் கொடுத்து சிலிண்டரை பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

2 கிலோ 958... 5 கிலோ 1518

2 கிலோ எடை கொண்ட சிலிண்டர் 958 ரூபாய்க்கும், 5 கிலோ எடைகொண்ட சிலிண்டர் 1518 ரூபாய்க்கும் முதற்கட்டமாக விற்பனை செய்யப்பட உள்ளது. தொடர்ந்து அதனை மீண்டும் நிரப்ப 2 கிலோவுக்கு 250 ரூபாயும், 5 கிலோவுக்கு 570 ரூபாயும் வசூலிக்கப்பட உள்ளது.

பேச்சிலர்களுக்கு உதவும் சிலிண்டர்

தனியாக அல்லது நண்பர்களுடன் தங்கியிருப்போருக்கு பயன்படும் வண்ணம் இந்த திட்டம் இருக்கும். இதை வாங்குவதற்கு தற்காலிக வசிப்பிடத்தின் முகவரிக்கான ஆதாரங்கள் ஏதும் தேவை இல்லை என்பதால், சொந்த ஊரையும் குடும்பத்தையும் விட்டு வேறு ஊரில் பணிப்புரியும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இந்த வகை சிலிண்டர்கள் பயனுள்ளதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment