Thamizhkadal WhatsApp Channel

சீட்ஸ் போளி

தேவையானவை:

கோதுமை மாவு,
மைதா மாவு - தலா ½ கப்,
பூசணி,
வெள்ளரி விதைகள் - ½ கப்,
ஏலப்பொடி - 1 ஸ்பூன்,
நெய்,
எண்ணெய் - தேவைக்கு.
கடலைப்பருப்பு - 1 கப்,
தேங்காய் துருவல் - ¼ கப்,
வெல்லம் - 1 கப்.

செய்முறை:

மாவுகளை சலித்து சிறிது கேசரி பவுடர் சேர்த்து சிறிது எண்ணெய், தண்ணீர் விட்டு நன்கு பிசையவும். கடலைப்பருப்பை வேகவைத்து எடுத்து, நெய் விட்டு உலர் விதைகளை வறுத்து, வெந்த பருப்புடன் வறுத்த விதை, ஏலப்பொடி, தேங்காய் துருவல், வெல்லம் சேர்த்து அரைத்து கெட்டி பூரணமாக கிளறி எடுத்து, பிசைந்த மாவில் சிறு உருண்டைகளை உள்ளே வைத்து வாழை இலையில் தட்டி தோசைக்கல்லில் நெய்விட்டு சூடானதும் பிரட்டி வேகவைத்து பரிமாறவும்.
Share:

No comments:

Post a Comment

THAMIZHKADAL TODAY NEWS

Total Pageviews

Categories