Thamizhkadal WhatsApp Channel

கார்ன் ப்ளேக்ஸ் மிக்ஸர்

தேவையானவை:

வறுக்காத கார்ன் ப்ளேக்ஸ் - 3 கப்,

வேர்க்கடலை - ¼ கப்,
முந்திரி - 10,
பாதாம் பருப்பு - 10,
பொட்டுக்கடலை - 5 டேபிள் ஸ்பூன்,
காய்ந்த திராட்சை - 3 ஸ்பூன்,
கறிவேப்பிலை - சிறிது,
பெருங்காயத் தூள் - 1 டீஸ்பூன்,
மிளகாய் துள் - 1 டேபிள் ஸ்பூன்,
உப்பு - தேவைக்கு,
எண்ணெய் - பொரிக்க.

செய்முறை:

வாணலியில் எண்ணெயைக் காயவைத்து கார்ன் ப்ளேக்ஸை பொரித்து எடுத்து வடிகட்டவும். இதே போல பாதாம், முந்திரி, வேர்க்கடலை, பொட்டுக்கடலை, திராட்சை, கறிவேப்பிலை என ஒவ்வொன்றாக தனித் தனியாக எண்ணெயில் பொரித்து கார்ன் ப்ளேக்கில் சேர்த்து, சூடாக இருக்கும்போதே உப்பு, மிளகாய்தூள், பெருங்காயத்தூள் சேர்த்து கலந்து ஆறியதும் காற்றுப்புகாத டப்பாவில் போட்டு வைக்கவும். கரகரப்பாக ருசியுடன் மிக்ஸர் தயார்.
Share:

No comments:

Post a Comment

THAMIZHKADAL TODAY NEWS

Total Pageviews

Categories