JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி
UPSC Mobile App: யுபிஎஸ்சி தேர்வாணையம் UPSC OFFICIAL APP என்ற புதிய செயலியை வெளியிட்டுள்ளது.
இந்திய அரசியலமைப்பின் 320வது பிரிவின் படி, ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட பதவிகளுக்கான இந்திய குடிமைப்பணி தேர்வு, இந்திய பொருளாதார பணி/இந்திய புள்ளியியல் பணி தேர்வு, ஒருங்கிணைந்த பாதுகாப்பு சேவைகள் தேர்வு ஆகிய ஒன்றியத்துப் பணியிடங்களுக்கான தேர்வுகளை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தி வருகிறது.
மேலும், தேர்வாணையத்தை கலந்தாய்வு செய்த பின்புதான் குடியியல் பணியிடங்களில் ஆளெடுக்கும் முறைகள் பற்றியும், ஒரு பணியில் இருந்து மற்றொன்றுக்குப் பதவி உயர்வுகள், மாற்றங்கள் செய்யவதில் மேற்கொள்ள வேண்டிய நெறிமுறைகள் மத்திய அரசு உருவாக்க வேண்டும். மேலும், இதனிடம் கலந்தாய்வு செய்த பின்புதான் ஒன்றியத்து குடிமைப் பணிகளில் பணிபுரியும் ஒருவருடைய ஒழுங்குக்கட்டுப்பாடு தொடர்பான முடிவுகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும்.
இதுநாள் வரை, தேர்வாணையம் www.upsc.gov.in என்ற இணைய பக்கம் மூலம் தனது செயற்பணிகள் குறித்த விவரங்களை வெளியிட்டு வந்தது. இந்த இணைய பக்கத்தில், தேர்வுகள், ஆளெடுக்கும் அறிவிப்புகள், தேர்வு முடிவுகள் ஆகியவை வெளியிடப்பட்டு வந்தது.
இந்நிலையில், மாறும் கால சூழலுக்கு ஏற்ப, தேர்வுத் தயாரிப்பு மற்றும் ஆள்சேர்க்கும் முறைகளை வசதிகளை மேலும் எளிமைபடுத்தும் வகையில், 'UPSC OFFICIAL APP' என்ற புதிய கைபேசி செயலியை வெளியிட்டுள்ளது. இதன் மூலம், தேர்வாணையத்தின் தகவல்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம். android App-ல் கிடைக்கும் இந்த செயலி முற்றிலும் இலவசமானது.
பின்குறிப்பு: இந்த செயலி மூலம் நேரடியாக தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியாது. தேர்வர்கள், வழக்கம் போல் upsconline.nic.in என்ற இணைய பக்கத்தின் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
No comments:
Post a Comment