Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Monday, October 31, 2022

உடற்பயிற்சி செய்தாலும் எடை குறையலையா? இதோ சிம்பிளான எடை குறைப்பு வழிகள்.!


பலர் உடல் எடையை குறைக்க விரும்பி உடற்பயிற்சி செய்தல், ஜிம்முக்கு போதல் என்று முயற்சிகளை எடுத்து வருவார்கள் .ஆனால் உடல் எடை பிரச்சனை சரியாகிறதா?


என்றால் 50 சதவீதம் நபர்களுக்கு கூட பலன் கிடைக்கவில்லை என்று தான் கூறப்படுகிறது.

உடலில் தேங்குகின்ற கெட்ட கொழுப்பினால் தான் இந்த உடல் எடை அதிகரிப்பதாக கூறப்படுகிறது. நமது வாழ்க்கை முறை தான் உடல் பருமன் அதிகரிக்க காரணம். இந்த உடல் பருமன் மன அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. நீரிழிவு நோய், மாரடைப்பு மற்றும் ரத்த அழுத்தம் போன்ற நோய்களை இது தருகிறது. எனவே உடல் எடையை குறைக்க சில எளிமையான வழிகளை இங்கு காணலாம்.

விட்டமின் சி நிறைந்த உணவுகளை அதிகப்படியாக சேர்த்துக் கொள்ள வேண்டும். இதனால் கொழுப்பு குறையும். நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். திராட்சை, எலுமிச்சை பழம் மற்றும் ஆரஞ்சு பழம் உள்ளிட்ட பழங்களில் விட்டமின் சி அதிகமாக இருக்கிறது.

அன்றாடம் ஆறு முதல் 8 மணி நேரம் உறங்க வேண்டும். தூக்கமின்மை மன அழுத்தத்திற்கு முக்கிய காரணம் மன அழுத்தத்தினால் உடல் எடை அதிகரிக்க அதிகப்படியான வாய்ப்புகள் இருக்கின்றது. எனவே, தூக்கத்தை சரியாக கடைப்பிடியுங்கள்.

யோகா மற்றும் உடற்பயிற்சி செய்வது நல்லது. காலையில் நடை பயிற்சி செய்வது நமது வயிறு சம்பந்தமான கோளாறுகளை நீக்கும்.

பால் கலந்த டீ காபி குடிப்பதை விட்டு பிளாக் டீ குடிப்பதை பழகிக்கொள்ள வேண்டும். எலுமிச்சையை வெந்நீரில் கலந்து குடிப்பதால் நமது உடலில் இருக்கும் கெட்ட கொழுப்புகள் குறையும்.

சீரக தண்ணீர் குடிப்பதும் கெட்ட கொழுப்பை குறைத்து உடல் பருமனை கட்டுப்படுத்தும். காலையில் வெறும் வயிற்றில் சுடு தண்ணீர் குடிப்பது உடலை புத்துணர்ச்சியுடன் வைத்து இருக்கும். இது உடல் எடையை குறைக்கவும் உதவும்.

No comments:

Post a Comment