Friday, October 21, 2022

சுத்தியில் அடித்தாற் போல் ஒற்றை தலைவலியா?.. இதெல்லாம் செய்யாதீங்க..

அனைத்து ஆசிரியப் பெருமக்களுக்கும் வணக்கம். தங்களின் படைப்புகள் மாணவர்களுக்கு பயன்படவேண்டும் என நினைத்தால், உங்கள் படைப்புகளை thamizhkadal.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்கவும் உங்கள் அனுமதியோடு வெளியிடப்படும்.

JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU


SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி

மைக்ரேன் எனும் ஒற்றைத் தலைவலியைக் கட்டுப்படுத்துவது குறித்து சிவகங்கை அரசு மருத்துவர் பரூக் அப்துல்லா விளக்கமளித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது சமூகவலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: மைக்ரேன் எனும் ஒற்றைத் தலைவலியானது வெடீர் வெடீர் என்று சுத்தியலைக் கொண்டு தலையில் அடித்தாற் போன்ற வலியை ஏற்படுத்துவதாக மக்கள் கூறுவதைக் கேட்கும் போது உண்மையில் அது எத்தனை பிணி தரும் அனுபவமாக இருக்கும் என்பதை யூகிக்க முடியும்.

ஆண்களை விட பெண்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். குடும்பத்தில் தாய் அவரது மகள்கள் முதல் பேத்திகள் வரை அனைவருக்கும் மைக்ரேன் இருக்கும் குடும்பங்களை பார்த்து வருகிறோம். வாழ்க்கைத் தரத்தை வெகுவாக பாதிக்கும் இந்த தலைவலியானது , பாதிப்புக்குள்ளாகும் நபரின் செயல்திறனை வெகுவாக குறைக்கும் தன்மை கொண்டதாக இருக்கின்றது .

நன்றாக படிக்கும் ஒரு மாணவிக்கு அவர் பரீட்சை எழுதும் நாட்களுக்கு முன்பு மைக்ரேன் வந்தால் அத்தோடு படிப்பின் மீது கவனம் குவிக்க இயலாமல் முழு மூச்சுடன் படிக்க இயலாது. மதிப்பெண்ணும் சரியும். இல்லற வாழ்வில் உள்ள பெண்களுக்கு இந்த தலைவலி வரும் போது குடும்ப உறுப்பினர்கள் மீது சினத்தை கக்கும் போது தேவையற்ற பல மனக்கசப்புகளும் சண்டை சச்சரவுகளும் நேருகின்றன. அலுவலகங்களில் மைக்ரேன் வலி ஏற்பட்டால் அன்றைய நாள் அத்தோடு முடிந்தது என்ற நிலை தான் எந்த செயலிலும் முழுமையாக ஈடுபாடு இல்லாமல் ஆக்கி விடும்.

இந்த ஒற்றைத் தலைவலிக்கு தற்போது அறியப்பட்டுள்ள காரணங்கள்

- மூளைக்கு க்ளூகோஸை எரிபொருளாக உபயோகிப்பதில் ஏற்படும் குளறுபடி / கோளாறு ( reduced glucose metabolism by brain)

- மூளை தேவைக்கும் அதிகமாக உணர்ச்சி மேலோங்கிய நிலையில் இருப்பது ( hyper excitability )

- உள்காயங்களால் ஏற்படும் மூளைத்தேய்மானம் ( inflammation)

- மூளை நரம்பு செல்களில் உள்ள மைட்டோகாண்ட்ரியா எனும் எனர்ஜி ஃபேக்டரி முறையாக செயலாற்றாமை

(Mitochondrial dysfunction) மேலும் மைக்ரேன் நோயாளிகளுக்கு மூளையில் க்ளூடமேட் எனும் உயிர் வேதியியல் ரசாயனம் அதிகமாக சுரக்கின்றது என்றும்

காபா (GABA - gamma amino butyric acid) எனும் ரசாயனம் அளவில் குறைவாக சுரப்பதாகவும் அறியப்பட்டுள்ளது.

க்ளூடமேட் எனும் ரசாயனம் என்பது எப்போதும் நம்மை ரோலர் கோஸ்டர் ரைடில் இருப்பது போலவும் ஒரு த்ரில்லர் பேய் படம் பார்ப்பது போன்ற உணர்விலுமே வைத்திருக்கும். இதுவே காபா ரசாயனம், அமைதியான மலைப் பகுதியில் ஆற அமர மெதுவாக நடந்து சென்று குளிர்ந்த காற்றை மெல்லிய சாரல்களுடன் அனுபவிப்பது போன்ற அமைதியான உணர்வைத் தரக்கூடியது. இத்தகைய பிரச்சனைகளை கண்டறிந்த பின் இதற்கு தீர்வு என்ன? இப்படி காரணம் ஏதுமின்றி வரும் மைக்ரேன் தலைவலியை கட்டுப்படுத்திட முடியுமா? என்று ஆய்வுகள் நிகழ்ந்துள்ளன, நிகழ்ந்து வருகின்றன.

மைக்ரேனால் பாதிக்கப்படுபவர்கள் பெரும்பான்மை பெண்களாகவும் அதிலும் பெரும்பான்மை உடல் பருமன் கொண்டவர்களாகவும் இருக்கிறார்கள். எனவே உடல் எடையை குறைப்பது என்பது மைக்ரேன் தலைவலியின் வீரியத்தை குறைப்பதாக பல ஆய்வுகள் கூறுகின்றன. உடல் எடையை குறைப்பதற்கு பல வழிகள் உண்டு. கலோரி குறைவாக உண்பது அல்லது கலோரி குறைவாக உண்பதுடன் சேர்த்து உடல் பயிற்சி செய்வது இவற்றால் உடல் எடையை குறைக்க முடியும். ஆனால் தற்போதைய ஆய்வுகள் "கீடோன்கள்" மூலம் மைக்ரேனைக் கட்டுப்படுத்த முடியுமா என்பது நோக்கி நகர்ந்து வருகின்றன. நம் உடலில் கீடோன்களை உற்பத்தி செய்து கீடோன்கள் உதவியுடன் மூளையை இயக்கும் போது மூளை எந்த சச்சரவுமின்றி செயல்படுகின்றது என்று ஆய்வுகள் சான்று பகர்கின்றன.

கிட்டத்தட்ட இதே பிரச்சனையுடன் இருக்கும் குழந்தைகளுக்கு வரும் மருந்துகளால் தீராத வலிப்பு நோய்க்கு (Refractile seizures) கீடோன்கள் உதவி புரிந்து வருகின்றன. நம் மூளையானது இரண்டு வகையான எரிபொருள்கள் மூலம் இயங்கும் . ஒன்று க்ளூகோஸ் ( நாம் அனைவரும் அறிந்த எரிபொருள்) இரண்டாவது எரிபொருள் - கீடோன்கள் ( பலரும் பெரிதாய் அறிந்திராத எரிபொருள்) இதில் கீடோன்கள் மூளைக்கு மிகச்சிறந்த எரிபொருளாக இருக்கும் தகுதி வாய்ந்தவை.

காரணம்

1. கீடோன்கள் உற்பத்தியின் போது க்ளூகோஸ் உற்பத்தியில் வெளியிடப்படுவதைப்போன்ற தேவையற்ற ஊறுசெய்யும் கழிவுகள் வெளியிடப்படுவதில்லை ( Ketones are clean fuel)

2. கீடோன்களை நம்பி மூளை இருக்கும் போது , க்ளூகோசை நம்பி இருக்கும் போது ஏற்பட்ட கொள்முதல் உபயோகப்படுத்தும் கோளாறுகள் நேர்வதில்லை.

(Ketones are energy efficient)

3. கீடோன்கள் மூளை செல்களின் தேவையற்ற உணர்ச்சி ஊக்கநிலையை மட்டுப்படுத்துகின்றன ( ketones control hyperexcitability)

4. கீடோன்களை பிரதான எரிபொருளாக தேர்ந்தெடுக்கும் போது க்ளூடமேட் அளவுகள் குறைந்த GABA அளவுகள் கூடுகின்றன. இதனால் அமைதியான நிலை ஏற்படுகின்றது.

5. கீடோன்களை எரிபொருளாக மாற்றியமைத்த பின்... ரத்தத்தில் ஏறும்/இறங்கும் க்ளூகோஸ் அளவுகள் பொறுத்து மூளையின் செயல்பாடுகள் மாறுவதில்லை.

மேற்சொன்ன பல விசயங்கள் மூலம் கீடோன்கள் மைக்ரேன் தலைவலி வராமலும் , வலிப்பு நோயை கட்டுப்படுத்தக்கூடும்.

இத்தகைய கீடோன்களை எவ்வாறு உற்பத்தி செய்வது ?

கீடோன்களை உணவில் இருந்து உற்பத்தி செய்ய மாவுச் சத்தை தினசரி 40 கிராமுக்கு மிகாமல் எடுக்க வேண்டும். தேவையான அளவு புரத சத்தும் கொழுப்புச்சத்தும் எடுக்கும் போது

நமது உடல் கீடோன்களை உற்பத்தி செய்து

நமது மூளை பெரும்பான்மை கீடோன்கள் மூலம் செயல்படும். இதை உணவு மூலம் அடையும் கீடோசிஸ் நிலை என்கிறோம் (Nutritional Ketosis)

இத்தகைய கீடோஸிஸ் நிலையில் பலருக்கும் மைக்ரேன் தலைவலி முன்பு இருந்ததை விடவும் வீரியத்தில் குறைதல், இரண்டு தலைவலிகளுக்கு இடையேயான கால அளவு நீட்டித்தல் , அடிக்கடி வரும் தலைவலி அரிதாகிப்போவது போன்ற பல நன்மைகளை அடைந்து வந்துள்ளதாக பல ஆய்வு முடிவுகள் உள்ளன.

மைக்ரேன் இருப்பவர்கள் செய்யக்கூடாதவை மற்றும் செய்ய வேண்டியவை குறித்து காண்போம்.

முதலில் செய்யக்கூடாதவை . இவையெல்லாம் மைக்ரேன் தலைவலியை தூண்டு வலிமை பெற்றவை

❌ அதிக மன அழுத்தம்/ அதீத உடல் சோர்வு

❌ உணவுகளை அதன் முறையான இடைவெளியில் உண்ணாமல் காலம் தாழ்த்தி உண்பது அல்லது பட்டினி கிடப்பது மைக்ரேனை கிளப்பி விடும்

❌ தூக்கமின்மை அல்லது பொழுதன்னைக்கும் தூங்குவது. இரண்டுமே தவறு.

❌ பெண்களுக்கு மாதவிடாய் கால ஹார்மோன் மாற்றங்கள் மற்றும் கருத்தடை மாத்திரை உட்கொள்ளல் மைக்ரேனை தூண்டுபவை

❌ மலைவாசஸ்தலங்களுக்கு செல்வது அல்லது உயரமான இடங்களில் இருந்து கீழே வருவது.. அதிக காற்று அடிப்பது

❌ அதீத உடற்பயிற்சி

❌ காபி அதிகம் அருந்துதல்

❌ இனிப்பு சுவை கொண்ட பொருள்களை உண்பது ( சீனி / நாட்டு சர்க்கரை/ தேன் முதற்கொண்டு இனிப்பு என்று நாக்கில் பட்டால் தலைவலி தூண்டப்படலாம்)

❌ பீட்ரூட், முள்ளங்கி, ஸ்பினாச் கீரை , செலரி போன்ற நைட்ரேட் அடங்கி உணவுகள்

சிலருக்கு சிவப்பு மாமிசமும் கடல் உணவுகளும் தலைவலியை கிளப்பலாம்.

❌ அனைத்து வகை குளிர்பானங்கள் / பாட்டிலில் அடைக்கப்பட்ட பழச்சாறுகள்

❌ உணவாக உட்கொண்டால் உடலில் க்ளூகோசை ஏற்றும் மாவுச்சத்து மிகுதி உணவுகள் (High glycemic foods)

❌ மது

❌ வாசனை திரவியங்கள்/ சிகரெட் புகையின் வாசனை

❌ மிக அதிக ஒலி

மேற்சொன்னவை அனைத்தும் மைக்ரேனை தூண்டக்கூடியவை.

மைக்ரேன் உங்களுக்கு இருக்கிறதா? மருத்துவரை சந்தித்து சிகிச்சை பெறுங்கள் கூடவே உணவு முறையை "குறை மாவு" (Low carbohydrate) உணவு முறையாக மாற்றுங்கள். இனிப்பின் மீது நா கொண்ட ஆசையை விட்டொழியுங்கள். மிதமான நடைபயிற்சி செய்யுங்கள். மன அமைதி தரும் விசயங்களை செய்யுங்கள். மன அழுத்தத்தை குறையுங்கள்.

இயலாவிட்டால் மனநல மருத்துவரை சந்தித்து கவுன்சிலிங் சிகிச்சை பெறுங்கள்.

குறை மாவு உணவு முறை

+

மிதமான உடல் பயிற்சி

+

மருத்துவ சிகிச்சை

+

மன அமைதியான வாழ்க்கை

மேற்சொன்ன நான்கும் மைக்ரேனில் இருந்து நல்ல விடுதலையை தரவல்லவை.

இவ்வாறு டாக்டர் பரூக் அப்துல்லா சமூகவலைதள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
Thamizhkadal Study Materials Websites Links Given Below:

WEBSITE 1 : CLICK HERE

WEBSITE 2 : CLICK HERE

WEBSITE 3 : CLICK HERE

No comments:

Post a Comment

பொதுச் செய்திகள்

6TH TO 9TH BRIDGE COURSE WORK BOOK & ALL WORK SHEET ANSWER KEY

CLASS

SUBJECTS

VIEW

9TH

TAMIL

CLICK

9TH

ENGLISH

CLICK

9TH

MATHS

CLICK

9TH

SCIENCE

CLICK

9TH

SOCIAL

CLICK

8TH

TAMIL

CLICK

8TH

ENGLISH

CLICK

8TH

MATHS

CLICK

8TH

SCIENCE TM

CLICK

8TH

SCIENCE EM

CLICK

8TH

SOCIAL

CLICK

7TH

TAMIL

CLICK

7TH

ENGLISH

CLICK

7TH

MATHS

CLICK

7TH

SCIENCE

CLICK

7TH

SOCIAL

CLICK

6TH

TAMIL

CLICK

6TH

ENGLISH

CLICK

6TH

MATHS

CLICK

6TH

SCIENCE

CLICK

6TH

SOCIAL

CLICK


Join Thamizhkadal WhatsApp Groups

Featured News

THAMIZHKADAL STUDY MATERIAL

கிழே உள்ள தலைப்பை தொடவும்

FOLLOW THE THAMIZHKADAL WEBSITES
WWW.THAMIZHKADAL.COM
EXAM STUDY MATERIAL ONLINE TEST VIDEO MATERIAL
TEXT BOOK CLICK VIEW ATTEND CLICK VIEW
இலக்கிய வரலாறு CLICK VIEW ATTEND CLICK VIEW
GK CLICK VIEW ATTEND CLICK VIEW
CURRENT AFFAIRS CLICK VIEW ATTEND CLICK VIEW
TNPSC CLICK VIEW ATTEND CLICK VIEW
TET CLICK VIEW ATTEND CLICK VIEW
PG TRB CLICK VIEW ATTEND CLICK VIEW
POLICE CLICK VIEW ATTEND CLICK VIEW
NEET CLICK VIEW ATTEND CLICK VIEW
TELENT EXAM NMMS TRUST NTSE
TK WEBSITES THAMIZHKADAL.COM THAMIZHKADAL.IN STUDY MATERIALS

©THAMIZHKADAL
Back To Top