Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Thursday, October 20, 2022

பணி காலத்தில் இதெல்லாம் செய்தால் அரசு ஊழியரின் பென்சன் கட் - எச்சரிக்கும் மத்திய அரசின் புதிய விதி

அரசு அதிகாரிகள் என்றாலே மதிப்பும், மரியாதையும் சமூகத்தில் தானாக கிடைக்கும். அதிலும் முன்பெல்லாம் நம் முன்னோர்கள் கால் காசு சம்பாதித்தாலும் அது அரசு உத்யோகத்திலிருந்து கிடைக்க வேண்டும் எனவும், பணி ஓய்விற்குப்பிறகு பென்சன் வருவதால் வயதான காலத்தில் உட்கார்ந்து சாப்பிடலாம் என்பார்கள். ஆனால் இன்றைக்கு பென்சன் திட்டம் குறிப்பிட்ட சில ஆண்டுகளுக்குள் பணியில் சேர்ந்தவர்களுக்குக் கிடையாது என்ற நடைமுறை உள்ளது. இந்நிலையில் சமீபத்தில் மத்திய பென்சன் மற்றும் கிராஜுவிட்டி பெறுவதற்கான வழிமுறைகளில் புதிய விதியைக் கொண்டுள்ளது.

மத்திய அரசின் புதிய விதி சொல்வது என்ன?

மத்திய சிவில் சர்வீசஸ் விதிகள் 2021 ன் படி, மத்திய அரசு ஊழியர்கள் தங்களுடைய பணிக்காலத்தில் எவ்வித முறைகேடுகளிலும் ஈடுபட்டிருக்கக்கூடாது எனவும் வேலையை முறையாக செய்யாமல் அலட்சியம் காட்டினார்கள் என்றாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த அக்டோபர் 7ஆம் தேதி மத்திய அரசு அறிவித்துள்ள திருத்தப்பட்ட விதி 8ன்படி, முறைகேடு மற்றும் பணியில் அலட்சியத்தன்மையோடு இருந்தால், ஓய்வு பெற்ற பிறகு மத்திய அரசு ஊழியரின் ஓய்வூதியம் மற்றும் பணிக்கொடை நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கலாம் எனவும் தெரிவித்துள்ளது.

அதிகாரிகள் செய்ய வேண்டியது என்ன?

ஜனாதிபதி பதவியில் இருந்து ஓய்வு பெறுபவரின் விஷயத்தில் ஏதேனும் முறைகேடுகள் நடைபெற்றால், ஜனாதிபதி நியமிக்கும் நிர்வாக அமைச்சர் முடிவு எடுக்கலாம். அதே வேளையில் பதவியில் இருந்து ஓய்வு பெற்ற ஓய்வூதியம் பெறுபவரின் விஷயத்தில், ஜனாதிபதிக்கு அடுத்தப்படியாக நியமனம் செய்யும் அதிகாரிகள் எந்த முடிவுகளையும் எடுக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இது மட்டுமின்றி ஒவ்வொரு துறையில் பணியாற்றும் மத்திய அரசு ஊழியர்கள், பணிக்காலத்தில் எதுவும் பிரச்சனை செய்தால் அல்லது முறைகேடுகளில் ஈடுபட்டால் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கலாம்.

அதன் படி முறைகேடுகளில் ஈடுபட்டிருக்கும் மத்திய அதிகாரிகளின் ஓய்வூதியம் மற்றும் பணிக்கொடையும் அல்லது இரண்டையும் முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ நிறுத்தி வைக்கலாம் . ஒருவேளை சம்பந்தப்பட்ட அரசு ஊழியர்கள் பெரிய முறைகேடுகளில் ஈடுபட்டிருப்பது கண்டறியப்பட்டால், ஓய்வூதியத்தை முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ திரும்பப் பெறலாம்.

இதோடு பணிக்காலத்தில் அலட்சியமாக செயல்பட்டிருந்தால் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டு மீண்டும் அவர்கள் பணி அமர்த்தப்படலாம். ஆனால் இவர்கள் ஸ்கேனர் லிஸ்டில் தான் வருவார்கள் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். இதோடு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஓய்வூதியம் அல்லது பணிக்கொடையை நிரந்தரமாக அல்லது குறிப்பிட்ட காலத்திற்கு நிறுத்தி வைக்கலாம். அல்லது சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் ஓய்வூதியம் அல்லது கருணைத் தொகையிலிருந்து முழுமையாகவோ அல்லது அரசாங்கத்திற்கு ஏற்பட்ட பண இழப்பின் ஒரு பகுதியையோ மீட்டெடுக்க உத்தரவிடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment