Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Saturday, October 22, 2022

கோதுமை பாதுஷா

கோதுமை பாதுஷா


தேவையானவை: 
கோதுமை மாவு - ஒன்றரை கப், 

சோள மாவு - 2 டேபிள்ஸ்பூன், 

கெட்டியான நெய் - அரை கப்,

தயிர் - 2 டேபிள்ஸ்பூன், 

சமையல் சோடா - கால் டீஸ்பூன், 

சர்க்கரை - ஒரு கப், தண்ணீர் - அரை கப், 

எண்ணெய் - பொரிக்க.


செய்முறை: சர்க்கரையும் தண்ணீரும் சேர்த்துக் கொதிக்கவிட்டு பிசுக்கு பதம் வந்தவுடன் இறக்கவும். வாயகன்ற பாத்திரத்தில் கோதுமை மாவு, சோள மாவு, நெய்யைச் சேர்த்து, விரல் நுனியால் உதிரி யாக ஆகும் வரை கலக்கவும். தயிர், சமையல் சோடா இரண்டையும் சேர்த்து நுரைக்க அடித்து, மாவுடன் கலந்து பிசையவும். கூடு மானவரை தண்ணீர் சேர்க்க வேண்டாம். 

மாவை சிறுசிறு உருண் டைகளாக உருட்டி, உள்ளங்கையில் வைத்து அழுத்தி, கட்டை விரலால் நடுவில் சிறிது அழுத்திய பின் எண்ணெயில் பொரித்து, சூடான சர்க்கரைப் பாகில் அமிழ்த்தி எடுக்கவும். செர்ரி அல்லது கலர் தேங்காய்த் துருவல் கொண்டு அலங்கரிக் கவும்.

No comments:

Post a Comment