Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Saturday, October 22, 2022

வெஜிடபிள் பாம்பே அல்வா

வெஜிடபிள் பாம்பே அல்வா

தேவையானவை: காய்கறி விழுது - அரை கப் (பீட்ரூட், கேரட், பீன்ஸ், மஞ்சள் பூசணி அனைத்தையும் ஆவியில் வேகவைத்து விழுதாக அரைக்கவும்), சோள மாவு -அரை கப், சர்க்கரை - 2 கப், நெய் - அரை கப், பாதாம்,முந்திரி, வெள்ளரி விதை (உடைத்தது) - கால் கப், வெனிலா எசன்ஸ் - அரை டீஸ்பூன், தண்ணீர் - 3 கப்.


செய்முறை: அடிகனமான பாத்திரத்தில் காய்கறி விழுது, சோள மாவு, தண்ணீர், சர்க்கரை அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்துக் கட்டி இல்லாமல் கலக்கவும். பாத்திரத்தை அடுப்பில் வைத்து மிதமான தீயில் கிளறிக்கொண்டே இருக்கவும். 

கலவை சற்று நிறம் மாறியதும் தீயை இன்னும் குறைத்து, அவ்வப்போது சிறிது நெய் சேர்த்துக் கைவிடாமல் கிளறவும்.பாத்திரத்தில் ஒட்டாத பதம் வந்ததும் நெய்யில் பொரித்த முந்திரி, பாதாம், வெள்ளரி விதை சேர்த்துக் கிளறவும். கடைசியாக வெனிலா எசன்ஸ் சேர்த்துக் கிளறி, நெய் தடவிய தட்டில் கொட்டி, சமப்படுத்தி, நன்கு ஆறவிட்டு, துண்டுகள் போட்டு பரிமாறவும்.

No comments:

Post a Comment