Subscribe Us

Saturday, October 22, 2022

டேட்ஸ் எள்ளு உருண்டை

தேவையானவை: 

பேரீச்சை - 200 கிராம், 

எள் - 50 கிராம், 

முந்திரி - 6, 

ஏலக்காய்த்தூள் -ஒரு சிட்டிகை,

 தேன் - 1 டீஸ்பூன், 

நெய் - 1 டீஸ்பூன்.



செய்முறை: எள்ளை வெறும் வாணலியில் வாசனை வரும்வரை வறுக்கவும். பேரீச்சையை பொடியாக நறுக்கி, நன்கு மசிக்கவும். அத்துடன் ஏலக்காய்த்தூள், நெய், தேன் சேர்த்து நன்கு பிசையவும். இதில் வறுத்த எள்ளு, பொடித்த முந்திரி, சேர்த்து நன்கு பிசைந்து, உருண்டை களாக உருட்டி பரிமாறவும்.

No comments:

Post a Comment

Popular Feed