Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Friday, October 21, 2022

CTET 2022: மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு வரும் டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் ஆன்லைன் முறையில் நடத்தப்படும் என்று மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்சி) தெரிவித்துள்ளது.

மத்திய அரசின் சார்பில் நடத்தப்படும் பள்ளிகளான கேந்திரிய வித்யாலயா, நவோதயா போன்ற போன்ற மத்திய அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் பணியில் சேர, சிபிஎஸ்இ சார்பில் நடத்தப்படும் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வில் (சி.டி.இ.டி) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

2022 ஆம் ஆண்டுக்கான கணினித் தேர்வு டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் நடத்தப்பட உள்ளது. தேர்வர்களின் நுழைவுச் சீட்டில் தேர்வுக்கான சரியான தேதி குறிப்பிடப்படும்.

இதற்கான ஆன்லைன் விண்ணப்ப நடைமுறை வரும் 31 ஆம் தேதி முதல் தொடங்கும் என்றும், ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி நவம்பர் 24 ஆம் தேதி என்று தெரிவித்துள்ளது.

இந்தத் தேர்வு இரண்டு தாள்களைக் கொண்டது. 5 ஆம் வகுப்பு வரையிலான ஆசிரியர் பணிக்கு முதல் தாள் மட்டும் எழுதினால் போதுமானது. எட்டாம் வகுப்பு வரையிலான ஆசிரியர் பணிக்கு இரண்டு தாள்களும் எழுத வேண்டும்.

ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான www.ctet.nic.in இன் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

No comments:

Post a Comment