Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Saturday, October 8, 2022

SSC CGL 2022 தேர்வை எதிர்கொள்வது எப்படி! - ஒரு முழுமையான வழிகாட்டல்!

SSC CGL: எஸ்எஸ்சி ஒருங்கிணைந்த பட்டதாரி தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள். ஏதேனும் ஒரு பல்கலைக்கழகத்தில் இளநிலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பணி:

உதவி தணிக்கை அதிகாரி/உதவி கணக்கு அதிகாரி, இளநிலை புள்ளியியல் அதிகாரி உள்ளிட்ட 35 பி, சி நிலை பதவிகளுக்கு நடக்கும் இந்த தேர்வின் முதனிலை தேர்வு டிசம்பர் மாதம் நடைபெற உள்ளது.

உதவி தணிக்கை அதிகாரி/உதவி கணக்கு அதிகாரி பணிக்கு பட்டய கணக்காளர்/ செலவு மற்றும் மேலாண்மை
கணக்காளர் படிப்புகளில் முதுநிலை / நிறுவன செயலாளர் அல்லது வணிகத்தில்/ வணிக நிர்வாகத்தில்/ வணிக பொருளாதாரத்தில் முதுநிலை படிப்புகள் முடித்திருக்க வேண்டும்.

இளநிலை புள்ளியியல் அதிகாரி பதவிக்கு 12 ஆம் வகுப்பு அளவில் கணிதத்தில் குறைந்தபட்சம் 60% மதிப்பெண்களுடன் ஏதாவது ஒரு பல்கலைகழகத்தில் புள்ளியியல் பாடத்தை ஒன்றாகக் கொண்ட இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

மற்ற பதவிகளுக்கு ஏதாவது ஒரு இளநிலை கல்வி முடித்திருந்தால் போதுமானது.

தேர்வு நகரங்கள்:

தமிழகத்தில் சென்னை, கோவை, கிருஷ்ணகிரி, மதுரை, சேலம்,
திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, வேலூர், ஆகிய இடங்களில் தேர்வு கணினி முறையில் நடத்தப்படும்.

தேர்வு முறை:

எஸ் எஸ் சி ஒருங்கிணைந்த பட்டதாரி தேர்வு tier 1 மற்றும் tier 2 என்று இரு நிலைகளில் நடைபெறும்.

Tier 1 முற்றிலும் தெரிவு செய்யும் மல்டிபிள் சாய்ஸ் கேள்விகளாக இருக்கும். tier 2 என்பது மல்டிபிள் சாய்ஸ் மற்றும் கட்டுரை வடிவில் இருக்கும்.

Tier -II இல் தாள்-I, தாள்-II மற்றும் தாள்-III தனி ஷிப்ட் களில் நடத்தப்படும்.
தாள்-I அனைத்து பதவிகளுக்கும் கட்டாயம்.
தாள்-II ஜூனியர் புள்ளியியல் மற்றும் திட்ட அமைச்சகத்தில் புள்ளியியல் அதிகாரி (JSO) பதவிகளுக்கு Tier -I இல் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கானது.
தாள்-III Tier -I இல் உதவி தணிக்கை அதிகாரி/ உதவியாளர் பதவிகளுக்கு
கணக்கு அதிகாரிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு மட்டுமே இருக்கும்.

Tier 1: முதனிலை தேர்வில்

பொது நுண்ணறிவு மற்றும் பகுத்தறிவு ,

பொது விழிப்புணர்வு,

குவான்டிடேட்டிவ் ஆப்டிடியூட்,

ஆங்கில புரிதல் ஆகிய நான்கு பிரிவுகளின் கீழ் தலா 25 கேள்விகள் என மொத்தம் 100 கேள்விகள் கேட்கப்படும்.

நேரம்:
சரியான விடையை தேர்ந்து எடுக்கும் வகையில் அமைந்த 100 கேள்விகளை எழுத ஒரு மணி நேரம் மட்டுமே வழங்கப்படும்.

மதிப்பெண்:
ஒவ்வொரு கேள்விக்கும் 4 விடைகள் கொடுக்கப்பட்டிருக்கும். சரியான விடை ஒவ்வொன்றிற்கும் 2 மதிப்பெண்கள். தவறாக குறியிடும் விடைகளுக்கு 0.50 மதிப்பெண் கழிக்கப்படும். எனவே தெரிந்த கேள்விகளை மட்டும் எழுத வேண்டும்.

டிப்ஸ்:
100 கேள்விகளை 60 நிமிடத்திற்குள் எழுத வேண்டும் என்றதுமே நேரத்தின் முக்கியத்துவத்தை நீங்கள் உணர்ந்திருப்பீர்கள். பலர் இந்த நேர மேலாண்மை இல்லாமல் 100 கேள்வியில் சில கேள்விகளை ஒரு முறை கூட பார்க்காமல் வெளியே வந்திருப்பார்கள். அந்த தப்பை செய்து விடாதீர்கள்.

எதில் ஸ்ட்ராங்

4 பிரிவுகளில் நீங்கள் எதில் ஸ்ட்ராங் என்பதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள். ஆனால் கணக்கில் நீங்கள் ஸ்ட்ராங் ஆக இருந்தாலும் அதை முதலில் எடுக்க வேண்டாம். அதை போட்டு முடிக்க நேரம் பிடிக்கும்.

மற்ற மூன்றில் எது உங்களுக்கு நன்றாகத் தெரியும் என்று பாருங்கள். ஆங்கிலத்தில் நீங்க ஸ்ட்ரோங் என்றால் முதலில் அதை எடுத்து 25 கேள்விகளை முடிக்க பாருங்கள். ரீசனிங் என்றால் அதை முதலில் முடித்து விடுங்கள். கணக்கு தவிர்த்து மற்ற 3 பிரிவுகளுக்கும் தலா 10 நிமிடங்களுக்குள் 25 கேள்விகள் போட வேண்டும் என்று முயற்சி செய்யுங்கள். முடிக்கக்கூடியது தான். அதிக பட்சம் 35 நிமிடங்களில் முடிக்கலாம்.

அப்படி முடித்தால் மீதமுள்ள 25 முதல் 30 நிமிடங்கள் கணக்கிற்கு கிடைக்கும். எளிமையாக இருக்கும் கேள்விகளை முதலில் போடுங்கள். டிரிக்னாமெட்ரி கேள்விகளை , இக்குவேஷன் கேள்விகளை கடைசியில் எழுதுங்கள். அப்போது நேரம் சரியாக இருக்கும். அனைத்து கேள்விகளையும் பார்க்க நேரம் சரியாக இருக்கும்.

எதை படிக்க வேண்டும்:

பள்ளி நிலையில் உள்ள அறிவியல் மற்றும் பொது அறிவை படியுங்கள். ஏதேனும் ஒரு வலைத்தளத்தில் கடைசி ஒரு வருடத்தின் நாட்டு நடப்புகளை படித்துக்கொள்ளுங்கள். R.S. அகர்வாலின் அப்டிடியூட் புத்தகங்களை வைத்து பயிற்சி செய்யுங்கள். இலவச மாதிரி தேர்வுகள் பல இணையத்தில் கிடைக்கிறது. அவற்றை அடிக்கடி போட்டு பார்த்து நேர மேலாண்மையும் கணக்கையும் பழகிக்கொள்ளுங்கள். தேர்வில் நிச்சயம் வெற்றிதான்

No comments:

Post a Comment