Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Tuesday, October 4, 2022

"எங்கள் கோரிக்கையை கேட்க அரசு தயாராக இல்லை" - TN TET ஆசிரியர்கள் வேதனை

TNTET தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களின் கோரிக்கையை கேட்க க்கூட
முதல்வரும், தலைமைச் செயலாளாரும் தயாராக இல்லை என TNTET ஆசிரியர்கள் தகுதித் தேர்வு தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட TNTET - ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் 200க்கும் மேற்பட்டோரை குண்டு கட்டாக காவல்துறை கைது செய்து வாகனத்தில் இழுத்துச் சென்றனர். 

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஈடுபட்ட TNTET - ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் மறு நியமன போட்டித் தேர்வு என்ற அரசாணை எண் 149ஐ நீக்கம் செய்ய வேண்டி போராட்டம் 200க்கும் மேற்பட்டோர் நேற்று காலையில் இருந்து உண்ணாவிரத போராட்டம் நடத்தி வந்தனர்

இந்த நிலையில் இந்த போராட்டமானது இரவு 9 மணி வரை நீடித்தது. இதற்கிடையே, சென்னை காவல் துறை கலைந்து செல்வதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

இவர்களுக்கு இடையே 1 மணி நேர பேச்சுவார்த்தை நடைபெற்றது. பேச்சுவார்த்தையின் இறுதியில் ஆசிரியர்கள் போராட்டத்தை கைவிடாதவாரு இருந்தனர்.


இதனால் அவர்களை காவல்துறையினர் கைது செய்ய முயற்சித்தனர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் காவல்துறையின் வாகனத்தில் வலுக்கட்டாயமாக பிடித்து தூக்கியவாறு வாகனத்தில் ஏற்றினர்.

அப்போது அங்கு விழுப்புரத்தைச் சார்ந்த பச்சையம்மாள் என்ற ஆசிரியை பேருந்தில் ஏற்றியபோது பேருந்தில் ஏற்பட்ட தள்ளுமுள்ளு காரணமாக மூச்சுத் திணறல் ஏற்பட்டு பேருந்தில் மயக்க நிலைக்குச் சென்றார்.

அவரை காவல்துறையினர் மற்றும் உடன் இருந்த ஆசிரியர்கள் உதவியுடன் அருகில் இருந்த ஆம்புலன்சில் ஏற்றப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இதனை அடுத்து ஆசிரியர்கள் அனைவரையும் கைது செய்து அழைத்துச் சென்றனர்.

No comments:

Post a Comment