Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Tuesday, October 18, 2022

TNPSC குரூப் 2 முதன்மை தேர்வுக்கு என்னென்ன புத்தகங்கள் படிக்க வேண்டும்.. புக்லிஸ்ட் இதோ!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட்ட குரூப் 2 பணியிடங்களுக்கான முதனிலைத் தேர்வு முடிவுகள் வரவிருக்கும் நிலையில் அதற்கான தயாரிப்புகள் தொடங்கியிருக்கும் .
முதன்மை தேர்வுக்கு இப்பொழுது தான் படிக்க தொடங்குகிறேன் என்னென்ன புத்தகங்கள் படிக்க வேண்டும் என்று தெரியவில்லை என்று யோசிக்கிறீர்களா? கவலை வேண்டாம்.

முதலில் முதன்மை தேர்வுக்கான பாடத்திட்டத்தை எடுத்து பகுப்பாய்வு செய்யுங்கள். 5 தலைப்புகளாக பிரித்து கொடுத்திருப்பர்.

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்

டிகிரி தரத்தில் கேள்விகள் அமையும். ஆனால் அதற்கு நீங்கள் முதலில் பள்ளி புத்தகங்களில் உள்ள அடிப்படைகளை தெளிவாக படிக்க வேண்டும்.

6 முதல் 10 ஆம் வகுப்பு வரையிலான பள்ளி புத்தகங்களை தெளிவாக படியுங்கள். அதன் பின்னர் செய்தி தாள்களில் வரும் நடப்பு நிகழ்வுகளில் உள்ள அறிவியல், தொழில்நுட்ப செய்திகள், மற்றும் அதன் விளக்கங்களை ஆழமாக படித்தால் போதும்.

குறிப்பு : புதுப்பிக்கும் சக்திகள், தன்னிறைவு பாரதம் முதலான தலைப்புகள் கொரோனா காலத்திற்கு பிறகு அதிகம் செய்திகளில் வருவதால் அந்த தலைப்புகளில் கவனம் தேவை.

அரசியல் அமைப்பு

மத்திய அரசு மற்றும் மாநில அரசு எப்படி இயங்குகிறது என்ற அடிப்படைகளை நீங்கள் அறிந்திருக்கிறீர்களா என்பதை சோதிக்கவே இந்த பகுதி அமைந்துள்ளது.

11 , 12 ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் (political science ) புத்தகங்கள்,
லக்ஷ்மிகாந்த் எழுதிய இந்திய அரசியலமைப்பு indian polity போதுமானது.

அதோடு தினசரி செய்திகளில் வரும் அரசு இயக்கம் சார்பான செய்திகளை மட்டும் படிக்க வேண்டும். அரசியல், கட்சி செய்திகள் தேவை இல்லை. சட்டம் எப்படி இயற்றப்படுகிறது, யாரால் இயற்றப்படுகிறது, எப்படி இயற்றுகிறார்கள் என்பது தான் முக்கியம். எந்த கட்சி யாரை விமர்சித்தார்கள் என்பது அவசியமில்லை . அரசால் நியமிக்கப்படும் கமிஷன்கள் பற்றி படிக்க வேண்டும்.

பொருளாதாரம்:

மத்திய அரசு மற்றும் மாநில அரசின் திட்டங்கள், பொருளாதார நிலைகள் குறித்து படிக்க வேண்டும்.

11, 12 பொருளாதார புத்தகங்கள்
இந்திய பொருளாதாரம்- ஷங்கர் கணேஷ்( ஆங்கிலம் மற்றும் தமிழில் கிடைக்கிறது)
மத்திய பட்ஜெட்
விரிவான மாநில பட்ஜெட், போதுமானது

மேலும் தெரிந்து கொள்ள ரமேஷ் சிங்கின் பொருளாதார புத்தகத்தை படிக்கலாம்.

இந்திய கலாச்சாரம் - 12 வது இந்திய கலாச்சார புத்தகம்

சமூக முன்னேற்றம் மற்றும் பிரச்சனைகள்

social problems in india - Ahuja
பெண்கள் கல்வி மற்றும் பெண்கள் முன்னேற்றத்திற்கான திட்டங்கள்,
பேரழிவு மேலாண்மை- அதற்கான அரசின் முன்னெடுப்புகள் , அரசு அமைப்புகள் குறித்து படிக்க வேண்டும்.

சமூக மேம்பாட்டிற்காக அரசு சார்பில் ஏற்படுத்தப்பட்ட திட்டங்கள். எ கா: ஆவாஸ் யோஜனா, அனைவர்க்கும் குடிநீர் தரும் ஜல் ஜீவன் மிஷன், கிராமங்களுக்கும் சாலை போடும் சடக் யோஜனா.
தனி மனித உரிமைகள் மற்றும் கடமைகள்,
ஆரோக்கியம் மற்றும் சுகாதாரம் சார்ந்த அரசின் செயல்பாடுகள் குறித்து படிக்க வேண்டும்.

மத்திய அரசின் திட்டங்கள் குறித்து படிக்க மத்திய அரசு வெளியிடும் யோஜனா, தமிழில் 'திட்டம்' என்ற மாத இதழ் வெளியாகிறது. அதை படிக்கலாம்.

சுற்றுசூழல் பொறுத்தவரை ஷங்கர் பயிற்சியகத்தின் புத்தகம் பெரும்பாலும் பரிந்துரைக்க படுகிறது.

மேலுள்ளவற்றை அது தொடர்புடைய அன்றாட செய்திகளோடு சரிவர படித்தால் வெற்றி உங்களுடையதே. தினமும் குறைந்தது 5 கட்டுரைகளை எழுதி பாருங்கள். அப்போது தான் தேர்வில் எழுத வசதியாக இருக்கும். ஒரு குறிப்பிட்ட தலைப்பில் அமையும் பொருளாதார, சமூக கருத்துக்கள் அனைத்தையும் சேர்த்து எழுத பழகுங்கள்.

No comments:

Post a Comment