Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Wednesday, October 12, 2022

TRB மூலம் தேர்வு செய்யப்பட்ட பணிநாடுநர்களுக்கு (முதுகலை வேதியியல் பாடம்) நாளை (13.10.2022) சென்னையில் பணிநியமன கலந்தாய்வு நடைபெறும் என பள்ளிக் கல்வி ஆணையர் அறிவிப்பு!




2020-2021 முதல் -2023 முடிய உள்ள அரசு / நகராட்சி மேல்நிலைப்பள்ளிகளில் 2849 முதுகலை ஆசிரியர் / உடற்கல்வி இயக்குநர் நிலை -1 / கணினி பயிற்றுநர் நிலை -1 காலிப்பணியிடங்களை நிரப்பிட பணிநாடுநர்கள் தெரிவு செய்து அளித்திட கேட்டுக்கொள்ளப்பட்டதையடுத்து ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் போட்டித்தேர்வு நடத்தப்பட்டு வேதியியல் பாடத்திற்கு பணி நாடுநர்கள் தெரிவுப்பட்டியல் ( Selection List ) பெறப்பட்டுள்ளது.

இப்பணிநாடுநர்களுக்கு நேரடி நியமன கலந்தாய்வு 13.10.2022 வியாழன் கிழமை சென்னையில் நடைபெற உள்ளது. 12.10.2022 அன்று ஆசிரியர் தேர்வு வாரிய ( trb.tn.nic.in ) இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள வேதியியல் பாடத்திற்குத் தற்காலிகமாகத் தெரிவு செய்யப்பட்ட ( Provisional selection list ) பட்டியலில் இடம் பெற்றுள்ள பணிநாடுநர்கள் , தங்களின் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்ட கடிதம் ( CV Call letter ) , Provisional selection letter மற்றும் அனைத்துக் கல்விச் சான்றிதழ்களின் நகல்களுடன் சென்னை -5 , கலைவாணர் அரங்கத்திற்கு 13.10.2022 அன்று காலை 9.00 மணிக்கு வருகை தருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment