Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Saturday, November 5, 2022

10 ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்றவர்களை தேசிய கல்வி சுற்றுலாவிற்கு அழைத்து சென்றுள்ளது சென்னை மாநகராட்சி

சென்னை மாநகராட்சி பள்ளிகளில் பயிலும் மாணவர்களில் 10 ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்றவர்களை தேசிய கல்வி சுற்றுலாவிற்கு அழைத்து சென்றுள்ளது சென்னை மாநகராட்சி. கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா காரணமாக கல்வி சுற்றுலா அழைத்துச் செல்லாத நிலையில் இந்த ஆண்டு மாநகராட்சி பள்ளியில் பயின்று அதிக மதிப்பெண் பெற்ற 50 மாணவ மாணவியர் டெல்லி, சண்டிகர், சிம்லா போன்ற மாநிலங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

கல்வி சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்லப்பட்ட மாணவ மாணவியர் ஆர்வத்துடன் அந்தந்த மாநிலங்களில் இருக்கும் முக்கியமான பகுதிகளை பார்த்து வியந்து வருகின்றனர். மேலும் அந்தந்த மாநிலத்தில் உள்ள மக்களின் நாகரீகம், பண்பாடு குறித்தும் அவர்களுக்கு விளக்கப்படுகிறது. அக்டோபர் 31 ஆம் தேதி தொடங்கிய கல்வி சுற்றுலாவை, மாணவ மாணவியர் இம்மாதம் எட்டாம் தேதி முடித்துக்கொண்டு சென்னை திரும்புகின்றனர். இந்தாண்டு மாணவர்களின் தேசிய கல்விச் சுற்றுலாவிற்காக சென்னை மாநகராட்சி ரூபாய் 9.17 லட்சம் நிதி ஒதுக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment