Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Tuesday, November 15, 2022

கல்வி பணிகளில் நிதியாளர் தேர்வுக்கு டிசம்பர் 10 வரை விண்ணப்பம்


கல்வி பணிகளில் நிதியாளர் பதவிக்கான தேர்வுக்கு இணையதளம் வாயிலாக டிசம்பர் 10ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.டிஎன்பிஎஸ்சி தமிழ்நாடு கல்வி பணிகளில் அடங்கிய நிதியாளர் பதவியில் காலியாக உள்ள 5 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இப்பதவிக்கு டிசம்பர் 10ம் தேதி வரை இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும். இணையவழி விண்ணப்பத்தை டிசம்பர் 15ம் தேதி நள்ளிரவு 12.01 மணி முதல் 17ம் தேதி இரவு 11.59 மணி வரை திருத்தம் செய்யலாம்.

இப்பதவிக்கான கணினி வழித் தேர்வு அடுத்த ஆண்டு மார்ச் 10ம் தேதி நடைபெறும். காலை 9.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை முதல் தாள் தேர்வு பொது நிர்வாகம்(முதுநிலை பட்டப்படிப்பு தரம்) அல்லது வணிக மேலாண்மை(முதுகலை பட்டப்படி தரம்) தேர்வும் நடைபெறும். பிற்பகல் கட்டாய மொழி தகுதி தேர்வு(10ம் வகுப்பு தரம்), பொது அறிவு(பட்டப்படிப்பு தரம்) தேர்வும் நடைபெறும். இவ்வாறு டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment