Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Friday, November 11, 2022

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 11.11.2022

திருக்குறள் :

பால்: அறத்துப்பால். 

குறள் இயல்: பாயிரவியல். 

அதிகாரம்: அறன்வலியுறுத்தல்

குறள் 39

அறத்தான் வருவதே இன்பம் மற்றெல்லாம்
புறத்த புகழும் இல.



அறநெறியில் வாழ்வதன் பயனாக வருவதே இன்பமாகும். அறத்தோடு பொருந்தாமல் வருவன எல்லாம் இன்பம் இல்லாதவை: புகழும் இல்லாதவை.


பழமொழி :

Constant change is a sign of progress.

தொடர்ந்த மாற்றம், முன்னேற்றத்திற்கான அறிகுறி.

இரண்டொழுக்க பண்புகள் :

1. அன்பையும் மரியாதையும் பிறருக்கு தயங்காமல் கொடுப்பேன் 

2. மகிழ்ச்சி என்னும் பெரிய பழத்தை விட நம்பிக்கை என்னும் சிறிய விதை பெரிதாக வளர்ந்து அநேக பழங்கள் கொடுக்கும் எனவே நம்பிக்கை விதை செல்லுமிடமெல்லாம் விதைப்பேன்

பொன்மொழி :

காலம் விடயங்களை மாற்றுகிறது என்று அவர்கள் எப்போதும் கூறுகிறார்கள், ஆனால் உண்மையில் நீங்கள் தான் அவற்றை மாற்ற வேண்டும். -- ஆண்டி வார்ஹோல்.

பொது அறிவு :

1. ரத்த வெள்ளை அணுக்களின் வேறு பெயர் என்ன? 

லூக்கோசைட்ஸ். 

2. ரத்த சிவப்பணுக்களின் வேறு பெயர் என்ன ? 

எரித்ரோசைட்ஸ்.

English words & meanings :

Water gas - a fuel. Noun நீர் வாயு எனப்படும் எரி பொருள் . பொருள் பெயர்

ஆரோக்ய வாழ்வு :

நான்கில் ஒரு தேக்கரண்டி முலேத்திப்பொடி, ஒரு சிட்டிகை இலவங்கப்பட்டை தூள், கருப்பு மிளகு தூள் மற்றும் சில துளசி இலைகளை தண்ணீரில் சேர்த்து ஐந்து நிமிடம் கொதிக்க வைக்கவும். ஒரு ஸ்பூன் தேன் சேர்த்து ஒரு நாளைக்கு இரண்டு முறை சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும். மிகவும் பயனுள்ள ஆயுர்வேத மருந்துகளில் ஒன்றாக இது கருதப்படுகிறது.

NMMS Q :

டெல்லியில் உள்ள இந்தியாவின் மிகப்பெரும் அருங்காட்சியகம் தொடங்கப்பட்ட ஆண்டு_________ 

விடை: 1949

நவம்பர் 11


தேசிய கல்வி நாள்

தேசிய கல்வி நாள் (National Education Dayஇந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் 11 ஆம் நாள் கொண்டாடப்படுகிறது. சுதந்திர இந்தியாவின் முதல் கல்வி அமைச்சராக விளங்கிய மௌலானா அபுல் கலாம் ஆசாத்தின் பிறந்தநாளை நினைவுகூரும் விதமாக இத்தினம் கொண்டாடப்படுகிறது. 15 ஆகத்து 1947 முதல் 2 பிப்ரவரி 1958 வரை இவர் கல்வி அமைச்சாராகப் பணியாற்றினார்.


மௌலானா அபுல் கலாம்  ஆசாத் 




மௌலானா அபுல் கலாம் முகியுத்தின் அகமது (11 நவம்பர் 1888 – 22 பெப்ரவரி 1958) (Abul Kalam Muhiyuddin Ahmed, வங்காளআবুল কালাম মুহিয়ুদ্দিন আহমেদ আজাদஉருதுمولانا ابوالکلام محی الدین احمد آزادஇந்திய விடுதலை இயக்கத்தின் மூத்த அரசியல் தலைவரும் இந்திய முசுலிம் அறிஞரும் ஆவார். சமய அடிப்படையிலான இந்தியப் பிரிவினையை எதிர்த்து இந்துமுசுலிம் ஒற்றுமையை வலியுறுத்திய முசுலிம் தலைவர்களில் முதன்மையானவர். இந்தியா விடுதலையடைந்த பிறகு அமைந்த முதல் இந்திய அரசில் கல்வி அமைச்சராகப் பணியாற்றியவர். பாக்கித்தான் பிரிவினையையும் அங்கு இராணுவ ஆட்சி ஏற்படப்போவதையும் முன்னரே தெரிவித்த பெருமை உடையவர்.[1] பரவலாக இவர் மௌலானா ஆசாத்என அறியப்படுகிறார்; ஆசாத் (விடுதலை) என்பது இவர் வைத்துக்கொண்ட புனைப்பெயராகும்.

நீதிக்கதை

பூனையைப் பார்த்து பயந்த எலிகள்

ஒரு ஊரில் யாரும் தங்காத ஒரு வீட்டில் நிறைய எலிகள் சந்தோஷமாக இருந்துச்சாம். அப்போது, ஒரு நாள் ஒரு பூனை அந்த வீட்டிற்கு வந்துச்சாம். அங்கு நிறைய எலிகள் இருப்பதைக் கண்டு பூனைக்கு மகிழ்ச்சியாம். அது ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு எலியாகப் பிடிச்சு சாப்பிட்டுச்சாம். எலிகள் மிகவும் பயந்து நடுங்கிச்சாம். 

எலிகள் எல்லாம் ஒன்றுகூடி பூனையிடம் இருந்து எப்படித் தப்புவது என்று யோசனை செய்ய, அதில் ஒரு எலி சொல்லிச்சாம், ஒரு மணியை பூனையின் கழுத்தில் கட்டினால், அது நடந்து வரும் போது டிங் டிங் டிங் என்று சத்தம் கேட்கும். நாம் ஓடி ஒளித்து விடலாம். பூனை ஏமாந்து போகும் என்று கூறியது. இதைக் கேட்டதும் எலிகள் எல்லாம் மகிழ்ச்சியால் துள்ளிக் குதித்தன. அப்போது ஒரு எலி, இந்த மணியை யார் பூனையின் கழுத்தில் கட்டுவது என்று கேட்டுதாம். இதைக் கேட்டதும் யாரால் மணியைக் கட்டமுடியும் என்று எலிகள் யோசித்துக் கொண்டிருக்கும் போதே மியாவ் மியாவ் மியாவ் என்ற பூனையின் சத்தம் கேட்டவுடன் எலிகள் பயந்து ஓடி ஒளித்துக்கொண்டன. 

நீதி :
முடியாத யோசனையால் எந்தப் பயனும் இல்லை.

இன்றைய செய்திகள்

11.11.22

*சென்னை- மைசூரு  'வந்தே பாரத்' ரயில் சேவை: பிரதமர் மோடி  நாளை தொடங்கி வைக்கிறார்.

*2021ஆம் ஆண்டு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இணைய வழியில் வினாடி-வினா போட்டி நடத்தப்பட்டது. இதில் 68 மாணவிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.  இந்த 68 மாணவர்களுடன், அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வியாழக்கிழமை சென்னையில்    இருந்து விமானம் மூலம் துபாய் சென்றார்.

*ஜவ்வரிசியில் கலப்படம் செய்யும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ அன்பரசன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

* ரெட் அலர்ட் எச்சரிக்கையைத் தொடர்ந்து திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை மாவட்டங்களில்  பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

*மெட்ராஸ் ஐ" என்று அழைக்கப்படும் கண் வெண்படல அழற்சி சென்னையில் அதிவேகமாக பரவி வருகிறது. சுய மருத்துவம் வேண்டாம் என்று கண் மருத்துவர் எச்சரிக்கை

*T20 உலக கோப்பை போட்டித் தொடரில் இன்று நடைபெற்ற இரண்டாவது அரையிறுதி சுற்றுப்போட்டியில் இங்கிலாந்து அணி இந்தியாவை வெற்றி பெற்று இறுதி சுற்றுக்கு தெரிவாகியுள்ளது.


Today's Headlines

*Chennai-Mysuru 'Vande Bharat' Rail Service: Prime Minister Modi launches tomorrow.

*In 2021, the Internet-Vina Competition was held for public school students. Of these, 68 students were selected. With these 68 students, Minister Anbil Mahesh went to Dubai by plane from Chennai on Thursday.

*Small and medium enterprises Minister TMO Anabarasan has warned that strict action will be taken against persons who are contaminated in Javarisi.

Following the Red Alert warning, schools and colleges have been announced today in Tiruvallur, Kanchipuram, Chengalpattu, and Ranipet districts.

*Eyeball inflammation, known as "Madras I ", is spreading at high speed in Chennai.

*England won the final semifinals of the T20 World Cup Tournament today.
 
 
 Prepared by

Covai women ICT_போதிமரம்

No comments:

Post a Comment