Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Wednesday, November 9, 2022

12-ம் வகுப்பு தேர்ச்சி போதும் 1,061 காலியிடங்களின் விவரங்கள்

தனிநபர் திறமை மேலாண்மைக்கான பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு மையத்தில் காலியாகவுள்ள 1061 இடங்களுக்கான நேரடி ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பணியின் முழு விவரங்களை இங்கு தெரிந்துகொள்ளுங்கள்.

1,061 காலியிடங்களின் விவரங்கள்:


பணியின் பெயர் காலிபணியிடங்கள்
Junior Translation Officer (JTO) 33
Stenographer Grade-I (English Typing) 215
Stenographer Grade-II (English Typing) 123
Administrative Assistant 'A'(English Typing) 250
Administrative Assistant 'A' (Hindi Typing) 12
Store Assistant 'A' (English Typing) 134
Store Assistant 'A' (Hindi Typing) 4
Security Assistant 'A' 41
Vehicle Operator 'A' 145
Fire Engine Driver 'A' 18
Fireman 86
மொத்தம் 1061

வயது வரம்பு:
18 வயதில் இருந்து 30 வயதிற்குள் இருக்க வேண்டும். மேலும் விரிவான வயது சலுகைகளுக்கு அறிவிப்பைப் பார்க்கவும்.

சம்பளம் :

பணி சம்பளம்
JTO & Stenographer Grade-I (English Typing) ரூ.35,400-1,12,400
Stenographer Grade-II ரூ.25,500-81,100/-
மற்ற பணியிடங்களுக்கு ரூ.19,900-63,200/-

பணிக்கான கல்வித்தகுதி:

பணியின் பெயர் கல்வித்தகுதி
Junior Translation Officer/
Stenographer Grade-I அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி அல்லது பல்கலைக்கழகத்தில் ஆங்கிலம் உடன் கூடிய முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது இளகலைப் பட்டப்படிப்புடன் மொழிபெயர்ப்பில் டிப்ளமோ பெற்றிருக்க வேண்டும்.
Stenographer Grade-II/
Administrative Assistant/
Store Assistant/
Security Assistant 12 வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Vehicle Operator/
Fire Engine Driver/
Fireman 10 வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வுசெய்யப்படும் முறை:
விண்ணப்பிக்கும் நபர்களுக்கு TIER-I (CBT) ஆன்லைன் எழுத்து தேர்வு, Tier-II (SKILL/PHYSICAL FITNESS AND CAPABILITY TEST, WHEREVER APPLICABLE) தேர்வு நடத்தப்பட்டு தேர்ந்தெடுக்கப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமுள்ளவர்கள் அங்கீகரிக்கப்பட்ட DRDO இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்கக் கட்டணமாக ரூ.100 வசூலிக்கப்படும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : https://www.drdo.gov.in/ceptm-advertisement/1920

முக்கிய நாட்கள்:

ஆன்லைனில் விண்ணப்பம் தொடங்கும் நாள் : 07.11.2022
ஆன்லைனில் விண்ணப்பம் முடியும் நாள் : 07.12.2022

குறிப்பு :

தேர்வு குறித்து தகவலுக்கு இணையதளத்தைத் தவறாமல் அணுக வேண்டும். மேலும் தகவலுக்கு இங்கே கிளிக் செய்யவும்.

No comments:

Post a Comment