Thursday, November 17, 2022

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 17.11.2022

அனைத்து ஆசிரியப் பெருமக்களுக்கும் வணக்கம். தங்களின் படைப்புகள் மாணவர்களுக்கு பயன்படவேண்டும் என நினைத்தால், உங்கள் படைப்புகளை thamizhkadal.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்கவும் உங்கள் அனுமதியோடு வெளியிடப்படும்.

JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU


SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி

திருக்குறள் :

பால்: அறத்துப்பால். 

அதிகாரம்: இல்வாழ்க்கை: 

குறள்: 

துறந்தார்க்கும் துவ்வாதவர்க்கும் இறந்தார்க்கும்
இல்வாழ்வான் என்பான் துணை.

விளக்கம்:
துறந்தவர்கும் வறியவர்க்கும் தன்னிடத்தே இறந்தவர்க்கும் இல்லறம் மேற்கொண்டு வாழ்கிறவன் துணையாவான்.

பழமொழி :

Do your duty and then ask for your rights

கடமையை செய்து பின்பு உரிமையைக் கேள்.

இரண்டொழுக்க பண்புகள் :

1. எ‌ந்த காரியம் எ‌ன்றாலு‌ம் கடவுள் மற்றும் மன சாட்சிக்கு பயந்து செய்வேன். 

2. மனிதர்கள் என்னை பார்க்க வேண்டும் என்று செய்ய மாட்டேன்.

பொன்மொழி :

நாம் நேரத்தை ஒரு கருவியாகப் பயன்படுத்த வேண்டும், ஊன்றுகோலாக அல்ல. --ஜான் எஃப். கென்னடி.

பொது அறிவு :

1. விசைத்தறியை கண்டுபிடித்தவர் யார் ? 

இ .கார்ட்ரைட்.

 2. உலகிலேயே மிகப்பெரிய பெருங்கடல் எது? 

 பசிபிக் பெருங்கடல் .(ஆழம் 12 ,925 அடி).

English words & meanings :

ba-nd -a ring noun மோதிரம்,ba-nd -a group noun குழு, ba-nned- prohibited. verb தடை செய்யப்பட்டது. all homophones 

ஆரோக்ய வாழ்வு :

நாவல் பழ விதை நோய் எதிர்ப்பு சக்தியை விரைவாக அதிகரிக்கிறது, இது தொற்று நோய்களின் அபாயத்தை குறைக்கிறது. இதை உட்கொள்வதன் மூலம், உடலுக்கு போதுமான பொட்டாசியம் கிடைக்கிறது. இது உயர் இரத்த அழுத்தத்தையும் குறைக்கிறது.

NMMS Q

பாமினி அரசில் சிறந்த மொழி அறிஞராகவும், கவிஞராகவும் விளங்கியவர் யார்? 

 விடை: சுல்தான் பிரோஸ்

நவம்பர் 17


லாலா லஜபதி ராய்  அவர்களின் நினைவுநாள்


லாலா லஜபதி ராய் ஒரு எழுத்தாளரும் அரசியல் தலைவரும் ஆவார். இந்திய விடுதலைப் போராட்டத்தில் இவரது பங்குக்காக இவர் பெரிதும் மதிக்கப்படுகிறார். இவரை மக்கள் பஞ்சாப் சிங்கம் எனவும் அழைப்பதுண்டு. லால்-பால்-பால் என்று அழைக்கப்படும் மூன்று முக்கியத் தலைவர்களுள் இவரும் ஒருவராவார். மற்ற இருவர் பால கங்காதர திலகர் மற்றும் பிபின் சந்திர பால் ஆவர். 'லாலா லஜபத் ராய்' பஞ்சாப் தேசிய வங்கி மற்றும் "லட்சுமி காப்புறுதி கம்பெனி" ஆகியவற்றை நிறுவியவரும் ஆவார்

நீதிக்கதை

முயற்சி செய்வோம்

ராஜாவும், மணியும் நண்பர்கள். அவர்கள் இருவருக்கும், தாய், தந்தையர் மற்றும் சுற்றார் கிடையாது. ராஜாவுக்குக் கண் தெரியாது. அதேபோல் மணியால் நடக்க முடியாது. அவர்கள் வாழ்ந்த கிராமத்தில் கிடைத்த வேலையைச் செய்து, கிராமத்தில் உள்ளோர் கொடுப்பதைச் சாப்பிட்டு வாழ்ந்து வந்தனர். ஒரு நாள் அவர்களுக்குப் பக்கத்து ஊரில் நடக்கும் திருவிழா பற்றித் தெரிய வந்தது. இருவருக்கும் அங்கே போக மிகுந்த ஆசை. அந்த ஊருக்குச் செல்ல மிகுந்த தொலைவு நடக்க வேண்டும். என்னாலோ நடக்க முடியாது, உன்னாலோ பார்க்க முடியாது. நமக்கு ஏன் இந்த ஆசை? என்று மணி வருத்ததுடன் சொன்னான். 

ராஜா சிறிது நேரம் தீவிரமாக யோசித்தான். பின் நண்பா! உன்னால் நடக்கத்தான் முடியாது. ஆனால் கூர்மையாகப் பார்க்க முடியும். என்னால் பார்க்கத்தான் முடியாது. ஆனால் வெகுதூரம் நடக்க முடியும். நீ என் தோள் மேல் ஏறிக்கொள். எனக்கு வழியைச் சொல்லிக்கொண்டே வா. நாம் இருவரும் திருவிழாவிற்குச் சென்று வரலாம் என்றான் ராஜா. இருவரும் மகிழ்ச்சியாக திருவிழாவிற்குச் சென்று வந்தார்கள். 

நீதி :
முயன்றால் முடியாதது எதுவுமில்லை.

இன்றைய செய்திகள்

17.11.22

* மருத்துவ மேற்படிப்பில் வெளிநாடு வாழ் இந்தியர் ஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பிக்கும் அனைத்து விண்ணப்பதாரர்களின், வெளிநாடு வாழ் இந்தியருக்கான சான்றிதழ்களை சரிபார்க்க வேண்டும் என மருத்துவப் படிப்பு தேர்வுக் குழுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

* தமிழ்நாடு பல்லுயிர் பாதுகாப்பு மற்றும் பசுமை காலநிலை மாற்ற எதிர்வுணர்வு திட்டம் 920 கோடி செலவில் செயல்படுத்தபட உள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

* ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தடை விதித்து பிறப்பிக்கப்பட்ட அவசர சட்டத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வாபஸ் பெறப்பட்டுள்ளன.

* தமிழகத்தில் 19-ம் தேதி வரை ஒரு சில இடங்களில் மிதமான மழையும், இம்மாதம் 20-ம் தேதியன்று 6 மாவட்டங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

* தென்பெண்ணை நதிநீர் பங்கீடு நடுவர் மன்றம் 4 வாரங்களில் அமைக்கப்படும் என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.

* ‘நிலவையும் தாண்டி’ - விண்ணில் பாய்ந்தது நாசாவின் ஆர்ட்டெமிஸ் ராக்கெட்.

* ஜி-20 கூட்டமைப்பின் புதிய தலைமைப் பொறுப்பு இந்தியா வசம் ஒப்படைப்பு.

* இந்தோனேசியாவின் பாலி தீவில் ஜி-20 அமைப்பின் உச்சி மாநாடு 14 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. அங்கு சென்றுள்ள உலக நாடுகளின் தலைவர்கள் மாநாட்டின் ஒரு பகுதியாக  பாலி தீவில் உள்ள மாங்குரோவ் எனப்படும் அலையாத்திக் காடுகளைப் பார்வையிட்டனர்.

* சென்னை ஹாக்கி சங்கம் சார்பில் முதலாவது டிவிசன் ஆக்கி லீக் போட்டி எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கியது.  இந்த போட்டியில் தமிழ்நாடு தபால் துறை, ரிசர்வ் வங்கி, அசோக் லேலண்ட், தமிழ்நாடு மின்சார வாரியம், ஏர் இந்தியா, எம்.சி.சி., செயின்ட் பால்ஸ் உள்பட 34 அணிகள் கலந்து கொள்கின்றன.

* டி20 தரவரிசையில் முதல் இடத்தை தக்கவைத்த சூர்யகுமார்: சாம் கரன், ஹேல்ஸ் முன்னேற்றம்.

* புரோ கபடி லீக்: தமிழ் தலைவாஸ்- பாட்னா பைரேட்ஸ் ஆட்டம் 'டை'.

Today's Headlines

* The Madras High Court has directed the Medical Examination Committee to verify the certificates of non-resident Indians of all applicants applying under the Non-Resident Indian quota for post-medical studies.

* Tamil Nadu Biodiversity Protection and Green Climate Change Response Project is going to be implemented at a cost of 920 crores, Chief Minister M. K. Stalin has said.

* Cases filed against the ordinance banning online gaming have been withdrawn in the Madras High Court.

* According to the Chennai Meteorological Department, there is a possibility of moderate rain in a few places in Tamil Nadu till 19th and heavy rain in 6 districts on 20th of this month.

* The Central Government has informed the Supreme Court that the Tenpenna River Water Distribution Arbitration Board will be set up in 4 weeks.

 *'Beyond the moon' - NASA's Artemis rocket flew into space.

 *New leadership of G-20 alliance handed over to India.

* The G-20 summit is being held on the 14th in Bali, Indonesia.  As part of the conference, the visiting world leaders visited the mangrove forests of Bali Island.

* The first Division Hockey League match on behalf of the Chennai Hockey Association started yesterday at the Mayor Radhakrishnan Stadium in Egmore.  34 teams including Tamil Nadu Postal Department, Reserve Bank, Ashok Leyland, Tamil Nadu Electricity Board, Air India, MCC, St Paul's are participating in this tournament.

 * Suryakumar retains top spot in T20 rankings: Sam Karan, Hales progress

* Pro Kabaddi League: Tamil Thalaivas- Patna Pirates Match 'Tie'.
 
 Prepared by

Covai women ICT_போதிமரம்


Thamizhkadal Study Materials Websites Links Given Below:

WEBSITE 1 : CLICK HERE

WEBSITE 2 : CLICK HERE

WEBSITE 3 : CLICK HERE

No comments:

Post a Comment

பொதுச் செய்திகள்

6TH TO 9TH BRIDGE COURSE WORK BOOK & ALL WORK SHEET ANSWER KEY

CLASS

SUBJECTS

VIEW

9TH

TAMIL

CLICK

9TH

ENGLISH

CLICK

9TH

MATHS

CLICK

9TH

SCIENCE

CLICK

9TH

SOCIAL

CLICK

8TH

TAMIL

CLICK

8TH

ENGLISH

CLICK

8TH

MATHS

CLICK

8TH

SCIENCE TM

CLICK

8TH

SCIENCE EM

CLICK

8TH

SOCIAL

CLICK

7TH

TAMIL

CLICK

7TH

ENGLISH

CLICK

7TH

MATHS

CLICK

7TH

SCIENCE

CLICK

7TH

SOCIAL

CLICK

6TH

TAMIL

CLICK

6TH

ENGLISH

CLICK

6TH

MATHS

CLICK

6TH

SCIENCE

CLICK

6TH

SOCIAL

CLICK


Featured News

THAMIZHKADAL STUDY MATERIAL

கிழே உள்ள தலைப்பை தொடவும்

FOLLOW THE THAMIZHKADAL WEBSITES
WWW.THAMIZHKADAL.COM
EXAM STUDY MATERIAL ONLINE TEST VIDEO MATERIAL
TEXT BOOK CLICK VIEW ATTEND CLICK VIEW
இலக்கிய வரலாறு CLICK VIEW ATTEND CLICK VIEW
GK CLICK VIEW ATTEND CLICK VIEW
CURRENT AFFAIRS CLICK VIEW ATTEND CLICK VIEW
TNPSC CLICK VIEW ATTEND CLICK VIEW
TET CLICK VIEW ATTEND CLICK VIEW
PG TRB CLICK VIEW ATTEND CLICK VIEW
POLICE CLICK VIEW ATTEND CLICK VIEW
NEET CLICK VIEW ATTEND CLICK VIEW
TELENT EXAM NMMS TRUST NTSE
TK WEBSITES THAMIZHKADAL.COM THAMIZHKADAL.IN STUDY MATERIALS

©THAMIZHKADAL
Back To Top