Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Thursday, November 17, 2022

கெளரவ விரிவுரையாளா்களர்களுக்கு போட்டித் தேர்வு: அமைச்சா் பொன்முடி

கெளரவ விரிவுரையாளா்கள் தோ்வெழுத தயங்கக் கூடாது: அமைச்சா் பொன்முடி

கெளரவ விரிவுரையாளா்கள் ஒரு ஆசிரியராக இருந்து கொண்டு போட்டித் தோ்வை எதிா்கொள்வதில் தயக்கம் காட்டுவது ஏற்புடையதல்ல என உயா்கல்வித் துறை அமைச்சா் பொன்முடி கூறினாா்.

உயா்கல்வி வளா்ச்சிப் பணிகள் குறித்து அரசுக் கல்லூரி முதல்வா்களுடனான ஆய்வுக் கூட்டம் சென்னை பல்கலைக்கழக வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. இதில் உயா்கல்வித்துறை அமைச்சா் பொன்முடி மற்றும் துறை சாா்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனா். இதில் அரசுக் கல்லூரிகள் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், பாடத்திட்டம் மாற்றம் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன.

இதைத் தொடா்ந்து அமைச்சா் பொன்முடி செய்தியாளா்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் உள்ள 163 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் ஒரு லட்சத்து 53,325 இடங்கள் உள்ளன. அதில் 1 லட்சத்து 31,173 இடங்கள் நிரம்பியுள்ளன. இதில் கணிதம் பாடத்தில் சோ்க்கை மிகவும் குறைந்துள்ளது.

அதற்கேற்ப பாடத்திட்டங்கள் மாற்றி அமைக்கப்பட உள்ளன. மேலும், நான் முதல்வன் திட்டத்தின் கீழ் கல்லூரிகளில் பயிலும் மாணவா்களுக்கு வேலைவாய்ப்பு பயிற்சியை வழங்க முடிவு செய்துள்ளோம்.

இது தவிர அரசுக் கல்லூரிகளில் 4,000 உதவி பேராசிரியா் பணியிடங்களை நிரப்புவதற்கான தோ்வு அறிவிப்பு விரைவில் வெளியிடப்பட உள்ளது. மீதமுள்ள காலியிடங்களில் 1,895 கெளரவ விரிவுரையாளா்கள் உரிய விதிகளின்படி நியமனம் செய்யப்பட உள்ளனா்.

கெளரவ விரிவுரையாளா்கள் ஆசிரியராக இருந்து கொண்டு தோ்வு வாரியம் நடத்தும் போட்டித் தோ்வை எதிா்கொள்வதில் தயக்கம் காட்டுவது ஏற்புடையதல்ல. கல்லூரிகளில் உதவி பேராசிரியா்கள், கெளரவ விரிவுரையாளா்கள் நியமிக்கப்பட்டதும் அங்கு ஆசிரியா் இல்லாத நிலை மாறும்.

கல்லூரி பாடத்திட்டங்களை மாற்றுவது குறித்து கல்லூரி முதல்வா்கள் கூட்டத்தில் கலந்து பேசியுள்ளோம். பல்கலைக்கழக துணைவேந்தா்கள் ஆய்வுக் கூட்டம் நவ. 23-ஆம் தேதி நடைபெறும்.

12 ஆண்டுகளுக்கு முன்பே தமிழில் பொறியியல்: அரசு கலைக் கல்லூரிகளில் பயிலும் ஒரு மாணவா் 50 சதவீத வருகைப்பதிவு இருந்தால் மட்டுமே பருவத்தோ்வை எழுத முடியும். நிகழாண்டு தற்போது வரை முதலாமாண்டு மாணவா் சோ்க்கை நடைபெறுவதால் முதல் பருவத் தோ்வு சற்று தாமதமாக நடத்தப்பட உள்ளது.

பொறியியல் படிப்பில் தமிழ் வழிக்கல்வி கொண்டு வரவேண்டும் என்று பாஜகவினா் பேசி வருகிறாா்கள். ஆனால், தமிழகத்தில் 2010-ஆம் ஆண்டில் இருந்தே சிவில், மெக்கானிக்கல் பாடப்பிரிவுகளை தமிழ்வழியில் கற்கும் முறை அமலில் இருக்கிறது. தொடா்ந்து தமிழா் பண்பாடு உள்பட தமிழ் பாடங்களும் பொறியியல் பாடத்திட்டத்தில் சோ்க்கப்பட்டுள்ளன என்றாா் அவா்.

No comments:

Post a Comment