JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி
நடுநிலை , உயர்நிலை , மேல்நிலை பள்ளிகளில் உடற்கல்வி ஓவியம் கணினி இசை தையல் பகுதிநேர ஆசிரியர்களை நிரந்தரம் செய்ய வேண்டும்: பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி எண் 110-ன் கீழ் அப்போதைய தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் 26-8-2011 அன்று உடற்கல்வி, ஓவியம், தொழிற்கல்வி ஆகியவற்றிற்காக நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் 16549 பகுதிநேர ஆசிரியர் பணியிடம் ஏற்படுத்தப்படும் என அறிவித்தார்.
இதன்படி அரசாணை வெளியிட்டு 2012ம் ஆண்டு இவர்கள் பணியில் நியமிக்கப் பட்டார்கள்.
கல்வி என்பது பாடப் புத்தகத்திற்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்காமல், கல்வி இணைச்செயல்பாடுகளுக்கும் உரிய முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்ற அடிப்படையில் 6,7 மற்றும் 8 ஆம் வகுப்புகளில் பயிலும் மாணவ, மாணவியர் பயனடைய இது வித்திடப்பட்டது.
இவர்களை நியமித்தபோது ஆரம்பத்தில் தொகுப்பூதியமாக ரூபாய் 5ஆயிரம் வழங்கப்பட்டது.
இது கடந்த 10 ஆண்டுகளில் படிப்படியாக முதலில் 2ஆயிரம், அடுத்தது எழுனூறு, கடைசியாக ரூபாய் 2300 என உயர்த்தியதால் ரூபாய் 10ஆயிரம் ஆக தொகுப்பூதியம் இவர்களுக்கு கிடைக்கிறது.
இதில் மரணம், பணிஓய்வு என 4ஆயிரம் காலியிடங்கள் ஆகிவிட்டது.
இதனால் 12ஆயிரம் பேர் பணிபுரிகிறார்கள்.
பள்ளி சூழலுக்கு ஏற்ப இவர்கள் பணிபுரிகிறார்கள்.
அதிமுக ஆட்சியில் திமுக முன்னாள் அமைச்சர்கள் பொன்முடி தங்கம் தென்னரசு பகுதிநேர ஆசிரியர்களுக்கு சம்பள உயர்வு கொடுக்க வேண்டும், பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தார்கள்.
திமுக சட்டமன்ற உறுப்பினர்களும் சட்டசபையில் இவர்களுக்காக கோரிக்கை வைத்து பேசி உள்ளார்கள்.
2021 சட்டமன்ற பொதுத்தேர்தல் திமுக தேர்தல் அறிக்கையில் 181வது வாக்குறுதியாக பகுதிநேர ஆசிரியர்கள் பணிநிரந்தரம் இடம்பெற்றது.
திமுக தலைவர் ஸ்டாலின் பங்கேற்ற தருமபுரி கன்னியாகுமரி மயிலாடுதுறை உங்கள் தொகுதி நிகழ்ச்சியில் பகுதிநேர ஆசிரியர்களிடம் கலந்துரையாடியபோது திமுக ஆட்சிக்கு வந்ததும் பணிநிரந்தரம் செய்வதாக வாக்குறுதி அளித்தார்.
இதனை அடுத்து திமுக ஆட்சிக்கு வந்ததும் பணி நிரந்தரத்தை பகுதிநேர ஆசிரியர்கள் எதிர்பார்த்து வருகிறார்கள்.
பள்ளிக்கல்வி அமைச்சர் 2022ம் ஆண்டு ஜனவரி 6 அன்று சட்டசபையில் அதிமுக உறுப்பினர் ஒரத்தநாடு வைத்திலிங்கம் கேள்விக்கு பதில் அளிக்கும்போது" திமுக தேர்தல் வாக்குறுதிபடி பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்றார்.
முதல்வர் ஸ்டாலின் அவர்களும் திமுக வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என்று சட்டசபையில் வாக்குறுதி அளித்து உள்ளார்.
ஆனால் இன்னும் இதனை நடைமுறைப் படுத்தாமல், பணிநிரந்தரம் தாமதம் ஆகிவருகிறது.
இதை விரைவுபடுத்த வேண்டும் என்று முதல்வர் சுற்றுப் பயணம் வரும் இடங்களில் பகுதிநேர ஆசிரியர்கள் மனு கொடுத்து நினைவூட்டி வருகிறார்கள்.
இது குறித்து தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் எஸ்.செந்தில்குமார்
கூறியது:
11ஆண்டாக பகுதிநேர ஆசிரியர்கள் உடற்கல்வி ஓவியம் கணினி இசை தையல் ஆகியவற்றில் நடுநிலை உயர்நிலை மேல்நிலை பள்ளிகளில் பணிபுரிகிறோம்.
அமைச்சரவையின் கொள்கை முடிவாக திமுக தேர்தல் வாக்குறுதி 181ஐ நிறைவேற்றி 12ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்களை நிரந்தரம் செய்ய வேண்டும்.
முதல்வர் ஸ்டாலின் அவர்கள் இதற்கான உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.
----------------------------------------
எஸ்.செந்தில்குமார்
செல்: 9487257203
மாநில ஒருங்கிணைப்பாளர்
தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு
No comments:
Post a Comment