Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Saturday, November 5, 2022

டிசம்பரில் கிளாட் நுழைவு தேர்வு

நாட்டில் உள்ள, 22 தேசிய சட்ட பல்கலைகளில், பட்டப் படிப்பில் சேர்வதற்கான நுழைவு தேர்வு, டிசம்பரில் நடத்தப்படும் என, அறிவிக்கப்பட்டு உள்ளது.

நாட்டின் பல்வேறு மாநிலங்களில், மத்திய அரசின் கட்டுப்பாட்டில், 22 தேசிய சட்ட பல்கலைகள் செயல்படுகின்றன. இவற்றில், எல்.எல்.பி., மற்றும் எல்.எல்.எம்., படிப்பில் சேர, கிளாட் நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.

அடுத்த, 2023- - 24ம் கல்வி ஆண்டில், தேசிய சட்ட பல்கலைகளில் சேர்வதற்கான கிளாட் நுழைவு தேர்வு, டிசம்பரில் நடத்தப்படும் என, தேசிய சட்ட பல்கலைகளின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

இந்த தேர்வில் பங்கேற்க விரும்புவோர், நவ. 13ம் தேதிக்குள், https://consortiumofnlus.ac.in/ என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டியது கட்டாயம்.

மேலும், 2024- - 25ம் கல்வி ஆண்டுக்கான கிளாட் நுழைவு தேர்வு, அடுத்த ஆண்டு டிசம்பரில் நடத்தப்படும்; அந்த கல்வி ஆண்டில், ஐந்து ஆண்டு பி.ஏ., ஹானர்ஸ் மற்றும் எல்.எல்.எம்., படிப்புகள் துவங்கப்பட உள்ளது என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment