JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி
'பத்தாம் வகுப்பு தேர்வு எழுத உள்ள அனைத்து தனித் தேர்வர்களும், அறிவியல் பாட செய்முறை பயிற்சிக்கு, வரும் 25ம் தேதிக்குள், மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகங்களில், தங்கள் பெயரை பதிவு செய்து கொள்ள வேண்டும்' என, அரசுத் தேர்வுகள் இயக்குனர் சேதுராமவர்மா தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
நடப்பு கல்வியாண்டு ஏப்ரலில் நடக்க உள்ள, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க உள்ள நேரடி தனித் தேர்வர்கள்; முதல் முறையாக, அனைத்து பாடங்களையும் தேர்வு எழுதுவோர்; ஏற்கனவே 2012க்கு முன் பழைய பாடத்திட்டத்தில் தேர்வு எழுதி, அறிவியல் பாடத்தில் தோல்வி அடைந்தவர்கள், அறிவியல் பாட செய்முறை பயிற்சி வகுப்பில் சேர, பெயர்களை பதிவு செய்து கொள்ள வேண்டும்.
அனைத்து தனித் தேர்வர்களும், நாளை முதல் 25ம் தேதிக்குள், சம்பந்தப்பட்ட மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகங்களில், தங்கள் பெயரை பதிவு செய்து கொள்ள வேண்டும். விண்ணப்பப் படிவத்தை, www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில், நாளை முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பயிற்சி வகுப்புகளுக்கு, 80 சதவீதம் வருகை தந்த தனித்தேர்வர்கள் மட்டுமே, நடப்பு கல்வியாண்டுக்கான பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு அனுமதிக்கப்படுவர்.
செய்முறை பயிற்சி பெற்றவர்கள், அந்தந்த மாவட்ட கல்வி அலுவலரை தொடர்பு கொண்டு, செய்முறை தேர்வு நடத்தப்படும் நாட்கள், மைய விபரம் அறிந்து, செய்முறை தேர்வை தவறாமல் எழுதிட வேண்டும்.
No comments:
Post a Comment