Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Thursday, November 3, 2022

உடலின் இந்த பாகங்களில் வலிக்கிறதா? கொலஸ்ட்ரால் அதிகரித்திருக்கலாம்! கவனம்



கொலஸ்ட்ரால் என்பது ஒரு மெழுகுப் பொருளாகும், இது இரத்தத்தில் உருவாகி தமனிகளில் சேரத் தொடங்குகிறது.

கொலஸ்ட்ரால் அதிகரிப்பதால், மாரடைப்பு அபாயம் அதிகரிக்கிறது. அதிக கொலஸ்ட்ரால் காரணமாக, தமனிகளின் இரத்த ஓட்டம் தடைபடத் தொடங்கி சீர் குலைகிறது, ரத்த ஓட்டம் சீர் கெட்டுப் போவதால் பல வகையான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படத் தொடங்குகின்றன. அதிக கொலஸ்ட்ரால் காரணமாக உடலில் காணப்படும் அறிகுறிகள் தோன்றினால், அதை உடனடியாக கவனம் கொடுத்து பார்த்துக் கொண்டால், அதை சீர் செய்துவிடலாம். கொலஸ்ட்ராலை சீராக்க, முறையான உணவு பழக்கத்தை மேற்கொள்ளவேண்டும். தவறாமல் உடற்பயிற்சிகளை செய்துவர வேண்டும்.

அதிக கொலஸ்ட்ரால் அறிகுறிகள்

நெஞ்சு வலி

இதயத்துக்கு ரத்தத்தை எடுத்துச் செல்லும் நரம்புகளில் கொலஸ்ட்ரால் சேர்ந்திருந்தால்,நெஞ்சுவலிபிரச்னை வரலாம். இதன் காரணமாக, சில நேரங்களில் மார்பில் வலியை உணரலாம் அல்லது அவ்வப்போது மார்பில் பாரமான உணர்வு ஏற்படும். .

கால் வலி

அதிக கொலஸ்ட்ரால் காரணமாக, கால்களின் தமனிகளுக்கு இரத்த ஓட்டம் தடைபடும். இதனால் கால்களுக்கு ரத்தம் சரியாக வராமல் நடப்பதில் சிரமம் ஏற்படும். அதோடு, பாதங்களில் வலி, பாதத்தின் தோலின் நிறம் மாறுவது என பல அறிகுறிகள் தோன்றும். இது தவிர, பாதங்களின் வெப்பம் குறைந்து, குளிர்ந்து போய் காணப்படும்.

இதய வலி

உடலின் பிற பகுதிகளில் ஏற்படும் அசாதாரன நிலைமையுடன், இதயத்தில் வலியும்கொலஸ்ட்ரால்அதிகரித்ததற்கான அறிகுறியாகும். அதிகப்படியான கொலஸ்ட்ரால் மாரடைப்பு மற்றும் பக்கவாதத்திற்கும் வழிவகுக்கும்.

யாருக்கு கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரிக்கும்?

உணவில் போதுமான ஊட்டச்சத்துக்களை சேர்த்துக் கொள்ளாதவர்கள் மற்றும் ஜங்க் ஃபுட் அதிகம் உண்பவர்களுக்கு அதிக கொலஸ்ட்ரால் பிரச்சனை காணப்படுகிறது

பதப்படுத்தப்பட்ட பொருட்களை அதிகமாக உட்கொள்வதும் கெட்ட கொலஸ்ட்ரால் சேர்வதற்கு காரணமாக இருக்கிறது

எந்த விதமான உடற்பயிற்சியும் செய்யாமல் இருப்பதும், உடல் பருமனாக இருப்பதும் கொலஸ்ட்ரால் இருப்பதற்கான காரணமாகிறது

புகைபிடிப்பவர்கள் மற்றும் மது அருந்துபவர்களுக்கு கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரிக்கிறது.

No comments:

Post a Comment