Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Wednesday, November 16, 2022

மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு விளையாட்டு, கலை, பண்பாடு போட்டிகள்: பள்ளிக்கல்வித்துறை உத்தரவு


மாற்றுத்திறனாளி மாணவர்களின் திறனை வெளிக்கொண்டுவரும் வகையில் குழந்தைகள் தினமானநவம்பர் 14 முதல் மாற்றுத்திறனாளிகள் தினமான டிசம்பர் 3 வரை பல்வேறு விளையாட்டு போட்டிகள் மற்றும் கலை, பண்பாடுநிகழ்ச்சிகள் நடத்த பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாநில திட்ட இயக்குனர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: பள்ளி குழந்தைகளின் வளர்ச்சிக்காக பல்வேறு நலத்திட்டங்களை பள்ளிக்கல்வித்துறை நிறைவேற்றி வருகிறது. அனைத்து மாற்றுத்திறனாளி குழந்தைகளை முன்கூட்டியே அடையாளம் காண்பதில் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கான தீர்வையும், பொதுமக்களிடையே இது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் மாநிலம் முழுவதுமான விழிப்புணர்வுநிகழ்ச்சிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

அனைத்து குழந்தைகளும் தரமான கல்வி பெறுவதை உறுதி செய்யும் நோக்குடன் “உள்ளடக்கிய கல்வியையும்” வழங்கி வருகிறது. எந்த குழந்தைக்கும் கல்வி விடுபடக்கூடாது என்பதை உறுதிசெய்யும் விதமாக மாநிலம் முழுவதும் மாற்றுத்திறனாளி குழந்தைகளை கண்டறிந்து, அவர்களை பள்ளியில் சேர்த்தல் தொடர்பானவிழிப்புணர்வு நிகழ்ச்சிகளை மேற்கொள்ளவும் திட்டமிடப்பட்டுள்ளது.

டிசம்பர் 3-ம் தேதி “உலக மாற்றுத்திறனாளிகள் தினம்” கொண்டாடப்படும் நிலையில், நவம்பர் 14-ம் தேதி முதல் டிசம்பர் 3-ம் தேதிவரை உறுதிமொழி எடுத்தல், விழிப்புணர்வு பேரணி, இணைவோம் மகிழ்வோம், கலை நிகழ்வு (காகித பறவை), கலை நிகழ்வு (நடனம்), விளையாட்டுப் போட்டிகள், சிறார் திரைப்படம் திரையிடுதல், சைகை மொழி தமிழ்த்தாய் வாழ்த்து உள்ளிட்ட பல்வேறு விதமான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. 

மாற்றுத்திறனாளி குழந்தைகளைக் கண்டறிதல் மற்றும் பள்ளியில் சேர்த்தல் குறித்த மாபெரும்தொடர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு ஏதுவான சூழலை ஏற்படுத்தும் நோக்கில் விளையாட்டு போட்டிகள் மற்றும் கலை பண்பாட்டு நிகழ்ச்சிகளை திட்டமிட்டபடி நடத்தி அவற்றை முறையாக ஆவணப்படுத்த வேண்டும். இவ்வாறு சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment