Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Monday, November 28, 2022

சித்தர்கள் காட்டிய இளமையின் இரகசியம்

சித்தர்கள் காட்டிய எட்டு வடிவ நடை பயிற்சி !

எளிய முறையில் பிரமிக்கத்தக்க ஆரோக்கியம் பெறும் முறை சித்தர்கள் காட்டிய சிறந்த வழிமுறை;

இடதும் வலதுமாய் திரும்பி திரும்பி நடக்கையில் அங்க அவையங்கள் அனைத்தும் ஒரே நேரத்தில் பயிற்சி பெருகின்றன. அதுவும் உடலை வருத்தாமல் தினமும் 15 முதல் 30 நிமிடம் வரை ஒன்று (அ) இருவேளை செய்தால் போதுமானது. இது அனைத்து வகையான யோகக்கலைக்கும் ஒப்பானதாய் சித்தர் நிகண்டு கூறுகிறது.

காலை நேரத்திலோ அல்லது நேரம் கிடைக்கும் போதோ, ஒரு அறையிலோ அல்லது வெட்டவெளியிலோ, கிழக்கு மேற்காக கோடு வரைந்து அதேபோல் 10 அடி விட்டு கோடுகளை வரைந்து அதற்குள் எட்டு வடிவில் நடைப்பயிற்சி செய்யவேண்டும்.

(இருசக்கர மோட்டார் வாகனம் பழகுவோர் செய்தல் போன்று).

இப்பயிற்சியை தெற்கிலிருந்து வடக்கு நோக்கி அல்லது வடக்கிலிருந்து தெற்கு நோக்கி செய்ய வேண்டும். 

15 வது நிமிட முடிவில் இருநாசித்துவாரங்களின் மூலம் உள்ளிழுக்கப்பட்ட முழு மூச்சுக் காற்றையும் உணரலாம். 

பின்னர் நடைப்பயிற்சியானது மேலும் 15 நிமிட நேரம் தொடர வேண்டும். 

இதற்கிடைப்பட்ட நேரத்தில் மார்புச்சளி தானாகவே வெளியே கரைந்து இறங்குவதை உணரலாம்.

பயன்கள் :

இந்த பயிற்சியை காலை மாலை 1 மணிநேரம் செய்து வந்தால் உள்ளங்கை விரல்கள் ரத்த ஓட்டத்தினால் சிவந்திருப்பதை உணரலாம்.

70வயது 50 வயதாக குறையும். முதுமை இளமையாகும்..சர்க்கரை வியாதி குறைந்து முற்றிலும் குணமடையும்.

குளிர்ச்சியினால் ஏற்படும் தலைவலி மலச்சிக்கல் தீரும். முழுமையாக சுவாசிக்கப்படும் மூச்சுக்காற்றால் 5 கிலோ பிராண வாயு உள்ளே சென்று மார்புச்சளி நீக்கப்படுகிறது. இரண்டு நாசிகளும் முழுமையாக சுவாசிப்பதால் நாசியில் உண்டாகும் சளியிலிருந்து நிவாரணம் கிடைக்கிறது.

கண்பார்வை அதிகரிக்கும், ஆரம்பநிலை கண்ணாடி அணிவது தவிர்க்கப்படுகிறது. மற்றவர்களுக்கு மூக்குக்கண்ணாட்யின் பாயிண்ட் அதிகமாகாமல் பாதுகாக்கப்படுகிறது.

செவிகளின் கேட்கும் திறன் அதிகரிக்கிறது. உடலினுள் அதிகப்படியான 5 கிலோ பிராண வாயுவால் உடல் சக்தி பெறுகிறது.

காலையிலும் மாலையிலும் 1 மணிநேரம் இந்த பயிற்சியை செய்து வந்தால் (ஹெர்னியா) குடலிறக்கநோய் குணமாகும். அளவான நடைப்பயிற்சியால் இரத்த அழுத்தப் குறைக்கப்படுகிறது.

இரண்டுவேளை 30 நிமிடம் செய்தால், பாத வெடிப்பு, வலி, மூட்டு வலிகள் மறைந்து விடுகின்றன. முதியோரும், நடக்க இயலாதோறும், பிறர் உதவியுடன் சக்கர வண்டியின் மூலம் செய்து பயன் அடையலாம்.

என் வீட்டு மாடியில் நான் இந்தப் பயிர்ச்சியை கடந்த ஓராண்டாக செய்து வருகிறேன் நண்பர்களும் பயிற்சி செய்து ஆரோக்கியமாக வாழ வாழ்த்துக்கள்.

இயற்கை உணவின் அதிசயம் ஆரோக்கிய வாழ்வின் ரகசியம்.

No comments:

Post a Comment