JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி
SSC CHSL 2022 Notification Out: மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள் / துறைகள் / அலுவலகங்களில் காலியாக உள்ள ஒருங்கிணைந்த மேல்நிலை (10+2) தேர்வு 2022-க்கான (Combined Higher Secondary (10+2) Level Examination) ஆட்சேர்ப்பு அறிவிக்கையை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (Staff Selection commission) வெளியிட்டுள்ளது.காலியிடங்கள் விவரம்: தோராய எண்ணிக்கை4500
பதவி: இந்த ஆட்சேர்க்கையின் மூலம் இளநிலை எழுத்தர் (Lower Divisional Clerk) / இளநிலை செயலக உதவியாளர் (Junior Secretariat Assistant),, தரவு உள்ளிடும் பணியாளர் (Data Entry Operators), தரவு உள்ளிடும் பணியாளர் குரூப் ஏ நிலை (Data Entry Operator, Grade 'A') பதவிகள் நியமனம் செய்யப்பட உள்ளன.
SSC CHSL 2022 முக்கியமான நாட்கள்:
அறிவிக்கை வெளியிடப்பட்ட நாள்: 06-12-2022
இணையதளத்தில் விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பதற்குரிய கடைசி நாள்: 04-01-2023
விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி நாள் :05-01-2023
முதற்கட்ட தேர்வு (கணினி வழி) : 2023, பிப்ரவரி- மார்ச்
இரண்டாம் கட்ட தேர்வு (கணினி வழி) : பின்னர் அறிவிக்கப்படும்.
SSC CHSL 2022 சம்பள விவரம்:
இளநிலை எழுத்தர்/இளநிலை செயலக உதவியாளர் : ரூ. 19,900-63,200 சம்பள நிலை 2
தரவு உள்ளிடும் பணியாளர்: ரூ.29,200-92,300 வரை (சம்பள நிலை -5)
தரவு உள்ளிடும் பணியாளர் குரூப் ஏ: ரூ.25,500-81,100
SSC CHSL 2022 கல்வித் தகுதி: மேற்கண்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட வாரியம் அல்லது பல்கலைக்கழகத்திலிருந்து இணையான தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
SSC CHSL 2022 வயதுக்கான தகுதி:
01-01-2022 அன்று விண்ணப்பதாரரின் வயது 18க்கு மேலும், 27க்கு கீழும் இருக்க வேண்டும்.
இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வழக்கமான தளர்வு அளிக்கப்படும்.
எனவே, நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பிற்கு மேல் பட்டியல் கண்ட சாதிகள்/ பட்டியல் கண்ட பழங்குடி வகுப்பினர் 5 ஆண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள். இதற்பிறப்படுத்தப்பட்ட வகுப்பினர் மூன்றாண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள். நிர்ணயிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள் 10 ஆண்டு வரை சலுகை பெற தகுதியுடைவராவர்.
விண்ணப்பம் செய்வது எப்படி?
ssc.nic.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க வேண்டும்.
Combined Higher Secondary (10+2) Level Examination, 2022 அறிவிக்கையை இந்த இணைப்பின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
No comments:
Post a Comment