Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Wednesday, December 7, 2022

TNTET 2022 - paper -1 Results Published

தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு 2022 ம் ஆண்டிற்கான ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அறிவிக்கை எண் .01 / 2022 , நாள் 07.03.2022 ன் படி ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் -1 ற்கான கணினி வழித்தேர்வுகள் ( Computer Based Examination ) 14.10.2022 முதல் 19.10.2022 வரை காலை / மாலை இருவேளைகளில் நடத்தப்பட்டது . இத்தேர்வில் 1,53,533 தேர்வர்கள் கலந்து கொண்டனர்.

தேர்வுக்கான கேள்விகளுக்கு உரிய தற்காலிக உத்தேச விடைக்குறிப்புகள் ( Tentative key Answer ) ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளமான www.trb.nic.in- ல் 28.10.2022 அன்று வெளிடயிடப்பட்டது . தற்காலிக விடைக்குறிப்பிற்கு 28.10.2022 முதல் 31.10.2022 பிற்பகல் 5.30 மணி வரை தேர்வர்கள் இணையவழியில் தங்களது ஆட்சேபனைகளை ( Objection ) தெரிவிக்க வாய்ப்பு வழங்கப்பட்டது.

அதன் அடிப்படையில் மேற்காண் தேதியில் பெறப்பட்ட அனைத்து ஆட்சேபனைகளையும் பாடவாரியாக வல்லுநர்குழு அமைக்கப்பட்டு முழுமையாக ஆய்வு செய்யப்பட்டது . ஆய்வுக்குபின் பாட வல்லுநர்குழுவால் இறுதி செய்யப்பட்ட விடைக்குறிப்புகளின் அடிப்படையில் தேர்வர்களது கணினி வழித் தேர்வினை மதிப்பீடு செய்து மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டன . தற்பொழுது தேர்வு எழுதிய அனைத்து தேர்வர்கள் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் இறுதி விடைக்குறிப்புடன் வெளிடயிடப்படுகிறது.




To download the result follow the steps given below:-

Step 1 – Click Login

Step 2 – Enter User ID and password

Step 3 – Click Dashboard

Step 4 – Click here to download score card

No comments:

Post a Comment