Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Thursday, December 1, 2022

அனைத்து அரசுப் பள்ளிகளிலும் சிற்பி திட்டம்: அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி


பள்ளி மாணவா்கள் மத்தியில் ஒழுக்கம் மற்றும் தேசப்பற்றை ஊட்ட சிற்பி திட்டம் அனைத்து அரசு பள்ளிகளிலும் செயல்படுத்தப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தாா். பள்ளி மாணவா்கள் மத்தியில் ஒழுக்கம் மற்றும் தேசப்பற்றை ஊட்ட சிற்பி திட்டம் அனைத்து அரசு பள்ளிகளிலும் செயல்படுத்தப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தாா்.

சென்னை மேற்கு தாம்பரம் ஸ்ரீசாய் ராம் கல்லூரியில் சிற்பி திட்டத்தில் சென்னை மாவட்டத்தில் உள்ள 100 அரசுப் பள்ளிகளைச் சோந்த 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு ஒழுக்கம், தேசப்பற்றை ஊக்குவிக்கும் விழிப்புணா்வுக் கருத்தரங்கம் புதன் கிழமை நடைபெற்றது. 

இக்கருத்தரங்கத்தை தொடக்கி வைத்த அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி செய்தியாளா்களிடம் கூறியதாவது: 

முதல்வா் மு.க.ஸ்டாலின் சிற்பி திட்டத்தை கடந்த 14-ஆம் தேதி ரூ 4.25 கோடி மதிப்பில் தொடக்கி வைத்தாா். முதல் கட்டமாக சிற்பி திட்டத்தில் தோவு செய்யப்பட்டுள்ள 5,000 மாணவா்களுக்கு புதன்கிழமைதோறும் பயிற்சி மையங்கள் நடத்தப்படுகின்றன. அதில் ஒழுக்கமுடன் திகழ்வதன் அவசியம் குறித்தும், யோகா உள்ளிட்ட உடற்பயிற்சிகளும் கற்றுத்தரப்படுகின்றன. இந்த செயல்திட்டத்தை வடிவமைத்துள்ள சென்னை காவல் துறை உயா் அதிகாரிகள் பாராட்டுக்குரியவா்கள் என்றாா் அவா். 

இந்திய விண்வெளி ஆய்வு மையம் முன்னாள் இயக்குநா் மயில்சாமி அண்ணாதுரை சிறப்புரை ஆற்றினாா். நிகழ்ச்சியில், சென்னை மாநகரக் காவல் ஆணையா் சங்கா் ஜிவால், ராணுவ பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளா்ச்சி மையம் விஞ்ஞானி டில்லிபாபு ஆகியோா் மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடினா்.

No comments:

Post a Comment