Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Thursday, December 1, 2022

மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பில் திடீர் மாற்றம்: மின்வாரிய அதிகாரிகள் தகவல்


மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பில் விரைவில் மாற்றம் செய்யப்பட உள்ளதாக மின்வாரியத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

தமிழகத்தில் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதற்காக மக்கள் பயன்பெறும் வகையில் அரசு சார்பில் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு ஆதார் இணைக்கப்பட்டு வருகிறது. தற்போது, ​​மின் நுகர்வோர் அட்டையில் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் மூலம் ஓ.டி.பி பெறப்பட்டு ஆதார் இணைக்கப்படுகிறது.

ஆதார் அட்டை எண், பெயர் பதிவிட்ட பிறகு நுகர்வோர் சரிபார்ப்புக்காக ஆதார் அட்டை நகல் பதிவேற்றம் செய்ய வேண்டும். நுகர்வோர் சமர்ப்பித்த விவரங்கள் அந்தந்த பிரிவு அலுவலகத்தின் உதவி பொறியாளரால் சரிபார்க்கப்பட்டு அவை அங்கீகரிக்கப்படும். இந்நிலையில் ஆதார் எண்ணை மின் இணைப்புடன் இணைப்பதில் உள்ள சிக்கலைப் போக்க எளிதாக மாற்றம் கொண்டு வரப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறுகையில், " மின் இணைப்புடன் ஆதார் நகல் சமர்பிப்பதால் பாதுகாப்பு பிரச்சினை ஏற்படுவதாக புகார் எழுந்தது. இதனால் ஆதாருக்கு மாற்றாக ஓ.டி.பி முறை, கைரேகை முறை பயன்படுத்தலாம் என மின்நுகர்வோர் பலர் வலியுறுத்தியுள்ளனர். இதையடுத்து, மின்வாரியம் தற்போது புதிய முறையை சோதனை செய்து வருகிறது. 

மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பில் ஆதார் நகல் இல்லாமல் ஓ.டி.பி(OTP) முறையில் இணைக்கும் வசதி சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 

இந்த சோதனை முடிந்ததும், விரைவில் நுகர்வோர் பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்படும். இந்த வசதி மூலம் ஆதார் இணைக்க, மின் நுகர்வோர் தங்கள் மின் நுகர்வோர் அட்டை மற்றும் ஆதார் அட்டை இரண்டிலும் ஒரே மொபைல் நம்பர் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும்" என்று கூறினர்.

No comments:

Post a Comment