JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி

தொப்பை இருக்கிறது என்று இனி கவலை வேண்டாம்! ஒரு டீஸ்பூன் தண்ணீரில் கலந்து குடித்தால் போதும்!
தற்போதுள்ள காலகட்டத்தில் பெண்களுக்கு சவாலாக இருப்பது உடல் எடையும் அதனால் ஏற்படும் தொப்பையும் தான்.
அதனை சரி செய்ய உடற்பயிற்சி மற்றும் எண்ணற்ற வழிமுறைகளை செய்திருப்பார்கள் ஆனாலும் அந்த தொப்பையானது குறையாது. இந்த பதிவின் மூலம் எப்படி தொப்பையை குறைப்பது என்று காணலாம்.
அதற்கு தேவைப்படும் பொருள் ஆலி விதை. இதில் அதிக அளவு நார் சத்துக்கள் உள்ளது. இதனை நாம் எடுத்துக் கொள்வதன் மூலம் உடலில் உள்ள செல்களின் செயல்பாட்டை அதிகரித்து தேவையற்ற கொழுப்புகளை குறைக்க உதவுகிறது.
பொதுவாகவே தொப்பையை குறைக்க நினைப்பார்கள் அதிக அளவில் நார்ச்சத்து உள்ள பொருட்களை எடுத்துக் கொள்ள வேண்டும். ஆளி விதையை மிதமான சூட்டில் வறுக்க வேண்டும்.அதனை மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்கு அரைத்து பொடி செய்து கொள்ள வேண்டும். இதனை மூன்று டீஸ்பூன் எடுத்துக் கொள்ள வேண்டும்.
அதில் இரண்டு டீஸ்பூன் அளவிற்கு ஓமம் சேர்க்க வேண்டும். ஓமம் சேர்ப்பதன் மூலம் வயிறு உப்புசமாக இருந்தால் அவை குணமாகும். அதனுடன் இரண்டு டீஸ்பூன் சீரகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். ஓமம் மற்றும் சீரகம் சேர்த்தவுடன் மீண்டும் ஒருமுறை அரைத்துக் கொள்ள வேண்டும்.
அதன் பிறகு காலையில் எழுந்தவுடன் பல் துலக்கி விட்டு ஒரு டம்ளர் வெதுவெதுப்பான தண்ணீரில் ஒரு டீஸ்பூன் கலந்து குடிக்க வேண்டும். மேலும் இதற்கு இனிப்பு சுவை வேண்டும் என்றால் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து குடிக்கலாம். இவ்வாறு ஒரு வாரம் தொடர்ந்து குடித்து வந்தால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் மற்றும் தொப்பை குறையும். குறிப்பாக தைராய்டு இருப்பவர்களும் இதனை எடுத்துக் கொள்ளலாம்.
No comments:
Post a Comment