JOIN OUR THAMIZHKADAL TECH SOCIAL MEDIAS





Friday, December 23, 2022

அரையாண்டு விடுமுறையில் மாற்றம்- பள்ளி கல்வி ஆணையர் அறிவிப்பு

தொடக்க பள்ளிகளில் அரையாண்டு விடுமுறை நாட்கள் மாற்றம் செய்யப்பட்டு உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்து உள்ளது.

தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையில் நடைபெற்று வந்த அரையாண்டு தேர்வுகள் இன்றுடன் முடிவடைகின்றன. இதைத் தொடர்ந்து ஒருவாரம் அரையாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி விடுமுறை முடிந்து 2023ம் ஆண்டு ஜனவரி 2ந்தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கும் என அறிவிக்கப்பட்டது

இந்த நிலையில் அரையாண்டு விடுமுறை நாளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக பள்ளி கல்வி ஆணையர் நந்தகுமார் வெளியிட்ட அறிவிப்பில், ஆரம்ப பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி முகாம்கள் ஏற்படு செய்யப்பட்டுள்ளது. இதனால் 1 முதல் 5-ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு ஜனவரி 5-ம் தேதி பள்ளிகள் துவங்கும். 6 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏற்கெனவே அறிவித்தப்படி ஜனவரி 2-ம் தேதி பள்ளிகள் தொடங்கும் என்றும் அறிவித்துள்ளார்.

மேலும் பள்ளி விடுமுறை நாட்களில் எந்த விதமான நேரடி வகுப்புகள் நடத்தக்கூடாது எனவும் மாணவர்களின் கல்வி நலன் கருதி ஆசிரியர்கள் வீட்டுப்பாடங்கள் மற்றும் செய்முறை பதிவேடுகள் போன்ற ஒப்படைப்புகளை மாணவர்களுக்கு தெரிவித்து அதனை செய்து முடித்து பள்ளி திறக்கும் நாளில் ஆசிரியர்களிடம் ஒப்படைத்திட அறிவுறுத்துமாறும் பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.

No comments:

Post a Comment