Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Friday, December 23, 2022

மாண்டஸ் புயலால் ஒத்திவைக்கப்பட்ட டிஎன்பிஎஸ்சி தேர்வு தேதி அறிவிப்பு.


தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் தமிழ்நாடு வன சார்நிலைப் பணியில் அடங்கிய வன தொழில் பழகுநர் பணிகளுக்கான தேர்வு 10.12.2022 தேதியில் நடத்த இருந்தது.
மாண்டஸ் புயல் காரணமாக இப்பணிகளுக்கான கணினி வழி தேர்வு தேதி அறிவிக்கப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.

தற்போது தமிழ்நாடு வன சார்நிலைப் பணியில் அடங்கிய வன தொழில் பழகுநர் (தொகுதி - 4) பதவிக்கான கணினி வழித் தேர்வு 27.12.2022 ஆம் தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தேர்வுக்கான அட்டவணையில் டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளனர்.

தேர்வு அட்டவணை:



தேர்வு நுழைவு சீட்டு:

இப்பதவிக்கான தேர்வர்கள் ஏற்கனவே பதிவிறக்கச் செய்த நுழைவு சீட்டையே தேர்வு எழுதப் பயன்படுத்திக் கொள்ளலாம். திருச்சி மாவட்ட தேர்வர்கள் மட்டும் மீண்டும் திருத்தம் செய்யப்பட்டுள்ள தேர்வுக்கூட நுழைவுச் சீட்டை தேர்வாணைய இணையத்தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

 தேர்வாணையத்தின் இணையத்தளத்தில் ஒருமுறை பதிவேற்றம் ( OTR Dashboard) மூலமாக விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீடு திருத்தம் செய்த நுழைவு சீட்டை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

No comments:

Post a Comment