Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Thursday, December 1, 2022

கார்த்திகை தீபத்தை ஸ்பெஷலாக்கும் பால் கொழுக்கட்டை!

பால் கொழுக்கட்டை எப்போதும் ஸ்பெஷல்தான். 

பார்ப்பதற்கு ரசகுல்லா போல் இருந்தாலும், இது பச்சரிசியில் செய்யப்படுகிறது. பால், தேங்காய்ப்பால் கொண்டு செய்யப்படுவதால் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். இதை சர்க்கரை மட்டும் அல்லாமல் வெல்லம் சேர்த்தும் செய்யலாம். சுவையான பால் கொழுக்கட்டையை, சுலபமாக நம் வீட்டிலேயே எப்படி செய்வது என்பதை தெரிந்துக் கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்:கொழுக்கட்டை மாவு - 1/2 கப்நெய் - ஒரு தேக்கரண்டி.சூடான தண்ணீர் - தேவையான அளவு.வெல்லம் - 200 கிராம்; அல்லது சர்க்கரை - 200 கிராம்தண்ணீர் - தேவையான அளவுபால் - 1 1/2 கப்ஏலக்காய் தூள் - ஒரு தேக்கரண்டிதிக்கான தேங்காய் பால் - 1 1/2 கப்முதலில் ஒரு அகண்ட பாத்திரத்தில் கொழுக்கட்டை மாவு 1/2 கப், ஒரு ஸ்பூன் நெய், தேவையான அளவு உப்பு மற்றும் சூடான தண்ணீர் சிறிதளவு ஊற்றி சப்பாத்தி மாவு போல் கையில் ஒட்டாத அளவு நன்றாக பிசைந்து கொள்ளவும். பின் பிசைந்த மாவை சிறு சிறு உருண்டையாக உருட்டி தனியாக எடுத்து வைத்து கொள்ளவும். சிலருக்கு தட்டையாக இருப்பது போல் இருந்தால் பிடிக்கும் அப்படியும் செய்யலாம். அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து 11/2 கப் பால் மற்றும் 1/2 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கவும்.

பால் நன்றாக கொதித்ததும் கொழுக்கட்டை உருண்டைகளை மிதமான தீயிலேயே 15 லிருந்து 20 நிமிடங்கள் வரை வெக வைக்க வேண்டும். வெல்ல பாகு செய்ய... அடுப்பில் ஒரு கடாயை வைத்து 1 கப் தண்ணீர் ஊற்றி 200 கிராம் வெல்லம் சேர்த்து, வெல்லம் கரையும் வரை நன்றாக கொதிக்க விடவும். வெல்லம் கரைந்ததும், அடுப்பில் இருந்து இறக்கி வடிகட்டி கொள்ளவும், இந்த வடிகட்டிய வெல்ல பாகை, சூடு குறைந்த பிறகு, வேகவைத்துள்ள பால் கொழுக்கட்டையில் சேர்க்கவும்.

அதில் ஏலக்காய் தூள் சேர்க்கவும். மேலும் தேங்காய் பாலையும் சேர்த்து ஒருமுறை கொதிக்க விடவும். அவ்வளவுதான் வெல்லம் கலந்த சுவையான பால் கொழுக்கட்டை தயார். சர்க்கரை சேர்த்து செய்யும் முறை: பாலில் போட்ட கொழுக்கட்டை உருண்டைகள் நன்றாக வெந்ததும் இறக்குவதற்கு 5 நிமிடங்களுக்கு முன்பாக, சர்க்கரை சேர்த்து, சர்க்கரை கரையும் அளவிற்கு மெதுவாக கிளறி விட வேண்டும்.

இறுதியாக திக்காக இருக்கும் தேங்காய்ப் பாலையும் சேர்த்து, ஏலக்காய் பொடி தூவி, இரண்டு நிமிடங்கள் கொதிக்க விடவும். வெல்லம் சுவை பிடிக்காதவர்கள், சர்க்கரை கொண்டு செய்யப்படும், இந்த தித்திக்கும் பால் கொழுக்கட்டையை செய்து சுவைக்கலாம். குறிப்பாக வெல்லம், சர்க்கரை சேர்த்து, பாலை வெகு நேரம் கொதிக்க விடக்கூடாது. பால் கொழுகட்டையில் இருக்கும், பால் நீர்த்து போவதற்கு வாய்ப்பு உள்ளது. வரவிருக்கும் கார்த்திகை தீபத்திற்கு இந்த முறைப்படி செய்து, அனைவரையும் அசத்துங்கள்.

No comments:

Post a Comment