Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Friday, December 23, 2022

அரையாண்டு விடுமுறையில் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது - அசைன்மென்ட்களை வழங்கலாம் : பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு


அரையாண்டு விடுமுறையில் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. விடுமுறை பற்றி அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. பொதுத்தேர்வை எதிர்கொள்ள இருக்கும் மாணவர்களுக்கு அசைன்மென்ட்களை வழங்கலாம் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

பள்ளிகளில் கடந்த சில நாட்களாக அரையாண்டு தேர்வுகள் நடைபெற்று வருகிறது. காலை மாலை என இரு நேரங்களிலும் மாணவர்களுக்கு தேர்வு நடைபெற்று வருகிறது. அரையாண்டுத் தேர்வுகள் டிசம்பர் 15 முதல் 24 டிசம்பர் 2022 வரை நடைபெற்று வருகிறது. காலை 10 மணி முதல் மதியம் 1.15 வரை தேர்வுகள் நடைபெறுகிறது.

இந்திலையில் நாளை தேர்வு முடியும் நாள் என்பதால் மாணவர்களுக்கு அரையாண்டு விடுமுறை அறிவித்துள்ளனர். டிசம்பர் 24 முதல் ஜனவரி 1ம் தேதி வரை பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையில் பள்ளி மாணவர்களுக்கு எந்த வித சிறப்பு வகுப்புகளும் நடத்த கூடாது என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. பொதுத்தேர்வை எதிர்கொள்ளும் 10,11,12 -ம் வகுப்பு மாணவர்களுக்கு அசைன்மென்ட் வழங்கலாம் என்று தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment