JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் எலக்ரானிக்,மெக்கானிகல் மற்றும் கணினி அறிவியல் பிரிவில் பொறியியல் படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இப்பணிகள் கேட் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் நிரப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணியின் விவரங்கள்:
பதவியில் பெயர் பணியிடம்
Scientist/Engineer'SC' (Electronics) 21
Scientist/Engineer 'SC'(Mechanical) 33
Scientist/Engineer 'SC'(Computer Science) 14
வயது வரம்பு:
இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க அதிகபட்ச வயது 28 ஆக உள்ளது.
சம்பளம்:
இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் Scientist/Engineer'SC' பிரிவில் பணியாற்ற ரூ.56,100/- மாத சம்பளமாக வழங்கப்படும். மேலும் இதர செலவுகளுக்குத் தனியே வழங்கப்படும்.
கல்வித்தகுதி மற்றும் கேட் தகுதி:
Scientist/Engineer'SC' (Electronics) பணிக்கு Electronics & Communication பாடத்தில் BE/ B.Tech அல்லது அதற்கு நிகரான டிகிரியில் 65% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். Electronics & Communication பாடத்தில் 2021/2022 கேட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Scientist/Engineer 'SC'(Mechanical) பணிக்கு Mechanical Engineering பாடத்தில் BE/ B.Tech அல்லது அதற்கு நிகரான டிகிரியில் 65% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். Mechanical Engineering பாடத்தில் 2021/2022 கேட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Scientist/Engineer 'SC'(Computer Science) பணிக்கு Computer Science Engineering பாடத்தில் BE/ B.Tech அல்லது அதற்கு நிகரான டிகிரியில் 65% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.Computer Science Engineering பாடத்தில் 2021/2022 கேட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை:
இப்பணிகளுக்குத் தகுதியானவர்களைக் கேட் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் நேர்காணல்/எழுத்துத் தேர்வுக்கு அழைப்பர். அதில் பெரும் மதிப்பெண்கள் மற்றும் கேட் தகுதி அடிப்படியில் பணி நியமனம் செய்யப்படும்.
விண்ணப்பிக்கும் முறை:
இஸ்ரோவில் இணையத்தளத்தில் இப்பணிகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விண்ணப்பக்கட்டணமாக ரூ.250/- ஆன்லைனில் செலுத்த வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க : https://www.isro.gov.in/
விண்ணப்பிக்கக் கடைசி நாள் : 19.12.2022
No comments:
Post a Comment