Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Friday, December 9, 2022

எதிர்காலத்தில் ஆண்களே இல்லாமல் போகலாம்.. Y குரோமோசோம் அழிந்து வருவதாக அதிர்ச்சி தரும் ஆய்வு வெளியீடு

மனிதர்களுக்கு மற்றும் பிற பாலூட்டிகளுக்கு பிறக்கும்குழந்தைகளின் பாலினம் ஆண் குரோமோசோம் என்றழைக்கப்படும் ஒய் குரோமோசோம் (Y chromosome) மரபணுவால் தீர்மானிக்கப்படுகிறது.

ஆனால் மனித Y chromosome சிதைந்து வருவதாகவும் மற்றும் சில மில்லியன் ஆண்டுகளில் இந்த குரோமோசோம் மறைந்து போகலாம் என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

Y குரோமோசோம் மெல்ல மெல்ல கோடிக்கணக்கான வருடங்களாக அதன் இருப்பை இழந்து வருகிறது. அதாவது ஒருகட்டத்தில் முற்றிலும் ஆண் குழந்தைகள் பிறக்காத காலம் வர கூடும். ஆண் குழந்தைகள் பிறக்காமல் பெண்கள் மட்டுமே உலகில் இருக்க கூடும். எனவே ஆண்களுக்கான ஒரு புதிய பாலின மரபணு உருவாகாவிட்டால் அல்லது கண்டுபிடிக்கா விட்டால் நிலைமை என்னவாகும்.? ஆனால் ஒரு நல்ல செய்தி என்னவென்றால் ஸ்பைனி எலிகளில் (spiny rats) கண்டறியப்பட்டுள்ள ஒரு புதிய பாலின மரபணு நம்முடைய மனிதகுலத்திற்கு பெரும் நம்பிக்கையை தருகிறது. நேஷ்னல் அகாடமி ஆஃப் சயின்ஸின் செயல்முறைகளில் ஒரு புதிய ஆய்வு கட்டுரையானது ஸ்பைனி எலிகள் எப்படி ஒரு புதிய ஆணை-தீர்மானிக்கும் மரபணுவை உருவாக்கியுள்ளது என்பதை காட்டுகிறது.

மனித பாலினத்தை Y குரோமோசோம் எவ்வாறு தீர்மானிக்கிறது.?

முதலில் Y குரோமோசோம் மனித பாலினத்தை எவ்வாறு தீர்மானிக்கிறது என்பதை புரிந்துகொள்வோம். மனிதர்கள் மற்றும் பல பாலூட்டிகளில் பெண்களுக்கு இரண்டு X குரோமோசோம்கள் (XX) உள்ளன. ஆண்களுக்கு ஒரு X மற்றும் மற்றொரு சிறிய குரோமோசோம் Y (XY) உள்ளன. இதில் X குரோமோசோமானது பாலினத்துடன் தொடர்பில்லாத அனைத்து வகையான வேலைகளையும் செய்யும் சுமார் 900 மரபணுக்களைக் கொண்டுள்ளது. அதாவது இது ஆண் அல்லது பெண்ணை தீர்மானிக்காது.

அதே நேரம் Y குரோமோசோமில் சுமார் 55 மரபணுக்கள் உள்ளன. தவிர இது பல நான்-கோடிங் டிஎன்ஏ-வை கொண்டுள்ளது. Y குரோமோசோம் X-ஐ விடஅளவு சிறியதாக இருக்கலாம். இது குறைவான மரபணுக்களை கொண்டிருந்தாலும் கருவில் வளரும் குழந்தை ஆணா அல்லது பெண்ணா என்பதை தீர்மானிக்கும் முக்கிய மரபணு உள்ளது. பொதுவாக கருத்தரித்த சுமார் 12 வாரங்களுக்கு பிறகு Y குரோமோசோமில் இருக்கும் குறிப்பிட்ட முதன்மை பாலின மரபணு மற்ற மரபணுக்களுக்கு ஆண் டெஸ்டிஸை உருவாக்க அறிவுறுத்துகிறது. கருவில் உருவாகும் டெஸ்டிஸ் ( embryonic testis) தான் ஆண் ஹார்மோன்களை சுரக்கிறது. இது குழந்தை ஆணாக வளர்வதை உறுதி செய்கிறது.


இந்த முதன்மை பாலின மரபணு கடந்த 1990-ல் SRY என அடையாளம் காணப்பட்டது. மனிதர்களைப் போலவே பெரும்பாலான பாலூட்டிகளிலும் X மற்றும் Y குரோமோசோம்கள் உள்ளன. ஒவ்வொன்றின் X குரோமோசோமிலும் நிறைய மரபணுக்கள் உள்ள நிலையில் Y-ஆனது வலிமைமிக்க SRY பிளஸ் அம்சத்துடன் வருகிறது. ஆஸ்திரேலியாவின் பிளாட்டிபஸ் XY என்ற பொதுவான மரபணுவைக் கொண்டுள்ளது. மனிதர்களுக்கு XX இருப்பது போல. X மற்றும் Y ஆகியவை பிளாட்டிபஸில் ஒரே மாதிரியாக இருக்கும்.

11 மில்லியன் ஆண்டுகளில்....

கடந்த 166 மில்லியன் ஆண்டுகளில் Yகுரோமோசோம் 900 மரபணுக்களிலிருந்து 55 மரபணுக்களாக குறைந்துள்ளது. இதன் பொருள் ஒவ்வொரு 1 மில்லியன் வருடங்களுக்கும் மனித Y குரோமோசோம் 5 மரபணுக்களை இழக்கிறது. நிலைமை இப்படியே நீடித்தால் அடுத்த 11 மில்லியன் ஆண்டுகளில், மனிதர்களின் Y குரோமோசோம் அதன் அனைத்து மரபணுக்களையும் முற்றிலும் இழந்துவிடும். இதனால் ஆண்களின் பிறப்பு என்பது முற்றிலும் முடிவடைய கூடும். இதனால் மனிதர்கள் தொடர்ந்து பூமியில் உயிர் பிழைக்க ஏதேனும் புதிய மரபணு உருவாக்கப்படுமா என்ற கேள்வி எழுகிறது.

இதனிடையே Y குரோமோசோம் இல்லாத 2 கொறித்துண்ணிகள் இன்னும் பூமியில் உயிர் வாழ்ந்து வருகின்றன. கிழக்கு ஐரோப்பாவின் மோல் வோல்ஸ் மற்றும் ஜப்பானின் ஸ்பைனி எலிகளின் உடலில் Y மற்றும் SRY குரோமோசோம்கள் தற்போது இல்லை. இதனிடையே ஸ்பைனி எலிகளின் Y-ல் உள்ள பெரும்பாலான மரபணுக்கள் மற்ற குரோமோசோம்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டிருப்பதை ஆராய்ச்சியாளர்கள் குழு கண்டுபிடித்தது. ஆனால் XX குரோமோசோம்கள் ஆண் மற்றும் பெண் இரு உயிரினங்களிடம் காணப்படுகின்றன. SRY மரபணு இல்லாமல் இது எப்படி நடக்கிறது என்று விஞ்ஞானிகள் ஆச்சர்யத்தில் ஆழ்ந்தனர்.

தொடர் பரிசோதனையில் ஆண்களின் மரபணுக்களில் இருக்கும் ஆனால் பெண்களில் இல்லாத வரிசைகளை ஆய்வுக்குழு கண்டறிந்தது, பின் இவற்றை ரீஃபைன்ட் செய்து ஒவ்வொரு தனி எலியின் வரிசையையும் சோதித்தனர். இறுதியாக ஸ்பைனி எலியின் குரோமோசோம் 3-ல் முக்கிய பாலின மரபணு SOX9-க்கு அருகில் ஒரு சிறிய வித்தியாசம் இருப்பதை கண்டுபிடித்தனர். ஒரு சிறிய டூப்ளிகேஷன் அனைத்து ஆண் எலிகளில் உள்ளது ஆனால் பெண் ஸ்பைனி எலிகளில் இல்லை.

SRY-க்கு பதிலளிக்கும் விதமாக SOX9-ஐ இயக்கும் சுவிட்சை இந்த சிறிய பிட் டூப்ளிகேடட் டிஎன்ஏ கொண்டுள்ளது என கூறியுள்ள ஆய்வாளர்கள், இந்த டூப்ளிகேஷனை எலிகளில் பரிசோதித்த போது, ​​அது SOX9 செயல்பாட்டை அதிகரிக்கிறது என்பதை கண்டறிந்தனர். எனவே இந்த மாற்றம் SOX9-ஐ SRY இல்லாமல் வேலை செய்ய அனுமதிக்கும்.


உலகில் சில வகை பல்லிகள் மற்றும் பாம்புகளில் பெண்பால் மட்டுமே இருக்கின்றன. இவை தாங்களாகவே இனப்பெருக்கம் செய்து கொண்டு தலைமுறைகளை முன்னோக்கி கொண்டு செல்கின்றன. எப்படி என்றால் இவற்றின் சொந்த மரபணுக்களிலிருந்து முட்டைகளை உருவாக்கி கொள்கின்றன. இது பார்த்தினோஜெனிசிஸ் என்று அழைக்கப்படுகிறது. ஆனால் இது போல மனிதர்கள் மற்றும் பிற பாலூட்டிகள் செய்ய முடியாது.

நம்மிடம் குறைந்தப்பட்சம் 30 முக்கியமான "இம்பிரின்டட்" மரபணுக்கள் உள்ளன. இவை ஆணிடமிருந்து வரும் விந்தணு வழியாக வந்தால் மட்டுமே செயல்படும். அதாவது மனிதர்களாகிய நமக்கு இனப்பெருக்கம் செய்ய விந்தணுவும் முட்டையும் தேவை. விந்து தேவை என்றால் ஆண்கள் தேவை. ஒய் குரோமோசோம்கள் அழிந்தால், மனித இனம் அழிவதற்கும் அதிக நேரம் ஆகாது. Y குரோமோசோமிற்கு பதில் வேறு சில குரோமோசோம்கள் உருவாக வாய்ப்பு உள்ளது. ஆனால் பாலினத்தை நிர்ணயிக்கும் புதிய மரபணுவின் பரிணாமம் சில ஆபத்துகளுடன் வர கூடும்.

No comments:

Post a Comment