JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி

உடம்பில் உள்ள கெட்ட கொழுப்புகளை கரைத்து தொப்பையை மறைய செய்யவும் வயிற்றைச் சுற்றி உள்ள ஊளை சதையை குறைக்கவும், உடல் எடையை கட்டுக்குள் வைக்கவும் இந்த பொடி பயன்படும். இந்த பொடியை நீங்கள் வீட்டிலேயே சுலபமாக தயாரிக்கலாம்.
இந்த பொடியை தயாரித்து தண்ணீரிலோ அல்லது மோரிலோ கலந்து குடிக்கவும் இதனால் பானை போல இருந்த வயிரும் மள மளவென குறைய ஆரம்பிக்கும். மேலும் செரிமான பிரச்சனை, மலச்சிக்கல் போன்ற தொந்தரவுகள் வரவே வராது. இந்த பொடியை தயாரிக்கும் முறையை பார்ப்போம்.
முதலில் ஒரு சிறிய கப் அளவு சீரகத்தை வாணலியில் போட்டு நன்றாக வறுக்கவும். அடுத்து இதில் சேர்க்கக்கூடிய பொருள் ஓமம். ஓமத்தில் கால்சியம், பொட்டாசியம் என ஏராளமான சத்துக்கள் உள்ளன. அடுத்து சேர்க்கக்கூடிய பொருள் சோம்பு. மூன்றையும் ஒரே கப்பில் அளந்து எடுத்துக் கொள்ளவும்.
நன்றாக வாணலியில் வறுத்து ஆறியதும் ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு பொடி செய்து கொள்ளவும். நன்றாக காற்று போக முடியாத பாட்டிலில் ஸ்டோர் செய்து வைக்கவும். இதை தினமும் காலை மாலை உணவிற்கு அரை மணி நேரத்துக்கு முன்பு சாப்பிட்டு வர நல்ல பலன் கிடைக்கும்.
ஒரு டம்ளரில் சுடுதண்ணீர் எடுத்துக்கொண்டு அதில் அரைத்த பவுடரை ஒரு ஸ்பூன் சேர்க்கவும். இதை உணவு உண்பதற்கு அரை மணி நேரம் முன்பு எடுத்துக்கொள்ள வேண்டும்.
உடல் எடையை குறைக்க வேண்டும் என்ற நோக்கம் இருப்பவர்கள் இந்த முறையை பின்பற்றலாம். இதனால் நீங்கள் எதிர்பார்க்காத அளவு எடை குறையும்.
No comments:
Post a Comment